இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

Onset of North East Monsoon 2025 by October 20 - Forecast Update on 26 September 2025

0
North East Monsoon Forecast Update – September 26, 2025 
===============
The Northeast Monsoon 2025 is expected to set in around mid-October, with the winds shifting easterly by October 20. Until then, Tamil Nadu will continue to see isolated thunderstorms and convective rains, especially in western and southern interior districts.

Southwest Monsoon Weakening
===============
👉 From October 5 or 6 onwards, the strength of the southwest monsoon winds is likely to decline over Tamil Nadu, paving the way for the northeast monsoon to gradually dominate in the next 10–15 days ( Transition Period). This transition phase will be crucial for rainfall activity.

Key District Rainfall Outlook (Early to Mid October)
=================
👉Palakkad Gap regions like Dharapuram, Kangeyam, Uthiyur, Udumalpet will receive heavy convective rains on some days, especially between October 5–15.Southern interior districts (Madurai, Dindigul, Theni, Sivagangai, Virudhunagar) will also benefit from thunderstorms during this period. Delta and North Coastal districts (including Chennai and suburbs), and Northern Interior Tamil Nadu can expect occasional thunderstorm activity with quality rains.

Larger Synoptic Picture
=================
Successive low-pressure systems are expected to form in the Bay of Bengal, most of which will drift inland near North Andhra before weakening and moving west.This will enhance rainfall in Andhra Pradesh, Telangana, Karnataka, Maharashtra, and catchment areas of the Cauvery basin in Kerala and Karnataka.Tamil Nadu’s western ghats and adjoining regions may see heavy spells due to these systems, while coastal Tamil Nadu (including Chennai) may get intermittent Convective storms during early October.

Northeast Monsoon Onset 2025
===================
The official declaration of the northeast monsoon only happens when easterlies firmly establish over Tamil Nadu.Around October 20, easterlies are expected to gain strength.Most likely, the official IMD announcement on the onset of the Northeast Monsoon will be made in the third week of October.Past years have shown delays or discrepancies in announcements, but this year conditions appear favorable for a timely declaration.Stay connected for more detailed monsoon performance updates in the coming weeks.—
 Yours truly,
Emmanuel 🌧️🙏

#WeatherUpdate #NortheastMonsoon2025 #TamilNaduWeather #MonsoonForecast #ChennaiRains #SouthIndiaWeather #IMDUpdate #RainAlert #CycloneWatch #ThunderstormUpdate #MaduraiWeather #DeltaRains #CoastalTamilNadu #BayOfBengalWeather #PuducherryWeatherman #Emmanuel


26.9.2025 வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? மற்றும் அக்டோபர் மாத உத்தேச வானிலை நிலவரம்! தென் மாவட்டங்கள் மற்றும் உட்பகுதிகளில் மீண்டும் பரவலான மழை எப்பொழுது?
====================
2025 அக்டோபர் 5 அல்லது 6 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரத் தன்மை தமிழகத்தில் குறைய தொடங்கி வடகிழக்கு பருவக்காற்று அடுத்த 10 முதல் 15 தினங்களில் ஊடுருவ இருப்பதை உறுதிப்படுத்தும்...

#தாராபுரம் , #காங்கேயம் , #ஊதியூர் , #உடுமலைப்பேட்டை போன்ற #பாலக்காடு_கணவாய் பகுதிகள் உட்பட மேற்கு உள் மாவட்டங்களிலும் , தென் உள் மாவட்டங்களிலும் , வடகடலோர மாவட்டங்களிலும் மீண்டும் பரவலான இடியுடன் கூடிய வெப்பச்சலன மழை எப்பொழுது?
===================
அக்டோபர் 5 அல்லது 6 தொடங்கி அதற்கு அடுத்த 10 தினங்கள் பாலக்காடு கணவாய் பகுதிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை... நிச்சயமாக சில தினங்களில் கனத்த மழை பதிவாகும் என்று நாம் உறுதியாகவே நம்பலாம்....#மதுரை மாவட்ட பகுதிகள் உட்பட தென் உள் மாவட்ட பகுதிகளுக்கும் இந்த நிலை பொருந்தும்..... அதேசமயம் வட உள் , #டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய தரமான வெப்பச்சலன மழையை அவ்வப்போது இந்த காலகட்டத்தில் நாம் எதிர்பார்க்கலாம்...

இந்த மாதத்தில் இனி வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? 
==================
அடுத்தடுத்து வங்கக் கடலில் வலு குறைந்த சுழற்சிகள் உருவாகி வடக்கு ஆந்திரா அருகே நிலத்திற்குள் ஊடுருவி அதன் பின்னர் அவைகள் நிலத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்.. ஆகையால் நிகழும் செப்டம்பர் மாதத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் அக்டோபர் மாத தொடக்க தினங்களிலும் தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் மேற்கு கடலோர மாநிலங்களில் அதிகரித்து காணப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்... ஆகையால் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் வலுவான மழைக்கு சில நேரங்களில் வாய்ப்புகள் உண்டு.... கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் வலுவான மழை பதிவாகும்.. இவை போக இந்த காலகட்டத்தில் ஆந்திரா , தெலுங்கானா , மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலம் அதிக பலனை அடையும்.... இடையே இடையே சில தினங்கள் குறிப்பாக அக்டோபர் தொடக்கத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.....

வடகிழக்கு பருவமழை 2025 எப்போது தொடங்கலாம்? 
====================
2025 அக்டோபர் மாத மத்தியில் மேற்கு திசை காற்றின் தீவிரம் குறைந்து கிழக்கு திசை காற்று வீச தொடங்கும்.... அக்டோபர் 20 ஆம் தேதி வாக்கில் அதற்கு நெருக்கத்தில் வடகிழக்கு திசை காற்று (கீழை காற்று) சற்று வீரியம் பெற வாய்ப்புகள் உள்ளது.... ஆகமொத்தத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வழியாக சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன்....

முதலில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதான அறிவிப்புகள் எப்படி வெளியாகும் என்று நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.... கிழக்கு திசைக்காற்று ஊடுருவ தொடங்கிவிட்டால் மட்டுமே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை வெளியிட மாட்டார்கள்..... சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்... அதில் சில குளறுபடிகளும் மற்றும் முரண்பாடுகள் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலவத்தான் செய்திருக்கிறது... உதாரணமாக 2020 ஆம் ஆண்டு வேறு வழியே இல்லாமல் அக்டோபர் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.... ஆனால் நவம்பர் 13 ஆம் தேதி வரை அந்த ஆண்டில் கீழே திசை காற்றால் பெரிய அளவு தாக்கம் என்பது இல்லை..... அதேபோல சில ஆண்டுகளில் முன்கூட்டியே அதாவது அக்டோபர் மாத முதல் வாரத்திலயே கிழக்கு திசை காற்று ஊடுருவி மழை பொழிவும் ஏற்பட்டு மிக சாதகமான அமைப்பு நிலவி வந்த பொழுது கூட அவர்கள் அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி அறிவிப்புகளை வெளியிட்ட நிகழ்வுகளும் வரலாற்றில் அதிகம் உண்டு... அதுவும் சமீப காலத்தில் அதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.....

அவர்களுக்கும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது ... வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக அவர்கள் அறிவிப்பை வெளியிட்டால் மழை எங்கே என்று மக்கள் கேட்க தொடங்கி விடுவார்கள்.... ஆகையால் கிழக்கு திசை காற்று ஊடுருவிய பின்னரும் சில நேரங்களில் அவர்களால் அறிவிக்க முடியாத சூழல்கள் ஏற்படுகிறது... அதேசமயம் சுழற்சிகள் உருவாகி ஒருவேளை நம்மை விட்டு விலகி சென்றது என்றால் வறண்ட நிலை தமிழகத்தில் நிலவும் அப்பொழுதும் அவர்களால் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட இயலாது.... இதைப் போன்று இதற்கு முந்தைய ஆண்டுகளில் பலமுறை நடந்திருக்கிறது....

இந்த ஆண்டு சரியான தருணத்தில் கிழக்கு திசை காற்று ஊடுருவ தொடங்கிய சில தினங்களில் மழையும் பதிவாகி வானிலை ஆய்வு மையமும் திறன்பட செயல்பட்டு முரண்பாடுகள் எதுவும் இன்றி வடகிழக்கு பருவமழை தொடங்கிய அந்த தேதியை அதிகாரப்பூர்வமாக தெளிவாக அறிவிப்பார்கள் என்று நாம் உறுதியாகவே நம்பலாம்...

வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் என்பது தொடர்பான தகவல்கள் பின்னர் ஒரு விரிவான எழுத்து பூர்வமான பதிவாக வெளியிடப்படும்...

தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் உங்களுடன் உங்கள் #இம்மானுவேல் 🙏

#Emmanuel_paul_antony
( #puducherryweatherman)
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக