In short, the ongoing interplay between these systems has disturbed the usual eastward oceanic wave movement—a phenomenon meteorologists call “Destructive Interference.”
Moving on, scattered rainfall is likely across southern and interior districts over the next 24 hours and coming days.
By November 9, a new circulation is expected to form over the southwest and adjoining south-central Bay of Bengal. To the question of whether this system will be influenced by the negative Indian Ocean Dipole—yes, it definitely will. Nevertheless, this circulation could favor Sri Lanka, South Tamil Nadu, and the Delta districts with significant rainfall.
Between November 12 and 18, heavy to very heavy rainfall is likely over eastern coastal and northern parts of Sri Lanka as the system moves towards it. Meanwhile, southern coastal Tamil Nadu districts—including Ramanathapuram and Thoothukudi—will begin to experience steady rains under the influence of the Northeast Monsoon around the 12th after that Within the next 24 to 48 hours, the Delta districts will join in, followed by Chennai, Puducherry, and the northern coastal belt.
Looking ahead, the possible system expected around November 19 near the southeast Bay of Bengal may bring some fascinating developments. It’s still too early to pinpoint exact details—but once things evolve, I’ll share a detailed update at the right time.
Stay tuned as always…
With you,
#Emmanuel 🙏
#MJO #WeatherUpdate #TamilNaduWeather #BayOfBengal #NortheastMonsoon #CycloneAlert #RainForecast #IndianOceanDipole #LaNina2025 #SouthIndiaRains #ChennaiRains #DeltaDistricts #SriLankaWeather #ImmanuelWeatherUpdate #TropicalCyclone #WeatherForecastIndia #RainUpdate #TamilNaduRains #EmmanuelForecast #WeatherNews
7.11.2025 காலை 8:00 மணி மேடன் ஜூலியன் அலைவு ( #MJO) வே நவம்பர் மாதத்தில் இந்திய மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் நிலவி வரும் மாறுதலால் குழம்பி நிற்கிறது.... இந்திய பெருங்கடலில் நிலவிவரும் வலுவான IOD மற்றும் பசிபிக் கடல் பரப்பில் நிலவி வரும் லா நினா சூழல்கள் மற்றும் Equatorial Kelvin wave முதலியவற்றால் இந்த மாத தொடக்கத்தில் 6 வது கட்டத்தில் இருந்த அது வலு குறைந்து மேற்கு நோக்கி 5 வது கட்டத்துக்கு மீண்டும் வந்தது.... தற்போது வரை அது 5வது கட்டத்தில் தொடர்வதாக தான் நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது.... கிழக்கு நோக்கி நகரும் என்று அழைக்கப்படும் ஒரு கடல் சார் அலைவின் போக்கையே சற்று தடுமாற செய்திருக்கிறது தற்போதைய வானிலை அமைப்பு என்று சொன்னால் அது மிகையாகாது... அதனால்தான் இந்திய மற்றும் பசிபிக் கடலில் நிலவும் இந்த நிலையை #Destructive_interference என்று குறிப்பிடுகிறார்கள்....
சரி அது போகட்டும் அடுத்த 24 மணி நேரத்திலும் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை வாய்ப்புகள் உள்ளது..
9.11.2025 ஆகிய நாளை மறுநாள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய சுழற்சி உருவாக இருக்கிறது.. அது இந்திய பெருங்கடலில் நிலவும் எதிர்மறையான Indian Ocean dipole ( IOD) தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகுமா என்று கேட்டீர்களேயானால் ?ஆம் நிச்சயமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்பதுதான் எனது பதில்.... ஆனபொழுதும் இந்த சுழற்சியால் இலங்கை , தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகப்பரணடையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.... அடுத்த சுழற்சி வங்கக்கடலில் உருவாகும் வரையில் அதாவது 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் இலங்கையின் கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு பகுதிகள் உட்பட இலங்கையின் பல்வேறு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது...
அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை வாய்ப்புகள் உள்ளது என்கின்ற பொழுதிலும்.... வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கத்தினால் நேரடியான மழைப்பொழிவை #இராமநாதபுரம் மற்றும் #தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்ட பகுதிகள் 12 ஆம் தேதி முதல் பலனடையே இருக்கின்றன... அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள்ளாக #டெல்டா மாவட்டங்களும் இதனுடன் இணைந்து பலனடையும்... அதன் பின்னர் சென்னை , புதுச்சேரி உட்பட வடகடலோர மாவட்டங்களும் இந்த சுழற்சியால் மழைப்பொழிவை பெற இருக்கிறது...
19.11.2025 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புகள் இருக்கக்கூடிய அந்த சுழற்சியின் நகர்வுகள் நமக்கு சுவாரஸ்யம் வழங்கக் கூடிய வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்... இன்னும் நிறைய நாட்கள் உள்ளது... அதற்குள்ளாக அடுத்த சுழற்சியை நகர்வுகள் தொடர்பாக துல்லியமாக எதையும் சொல்ல முடியாது... காத்திருங்கள்... சரியான தருணம் வருகையில் அது தொடர்பான விரிவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் உங்களுடன் உங்கள் #இம்மானுவேல் 🙏
