உங்கள் ' புதுச்சேரி வெதர்மேன் ' இமானுவேல் வழங்கும் 2021 வடகிழக்கு பருவமழை தொடர்பான உத்தேச மூன்றாம் கட்ட வானிலை அறிக்கை எழுதப்படும் நாள் : 22.10.2021
2021 வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் ? இயல்பான அளவு மழை கிடைக்குமா?
========================
எனது பதில் : நிகழும் அக்டோபர் மாதத்தில் இதுவரையில் அதாவது 23.10.2021 ஆம் தேதிவரையில் நமக்கு 172 மி.மீ அளவு மழை கிடைத்துள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இந்த மாதத்தில் மழை பதிவாகும் இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு ஆகையால் நிகழும் அக்டோபர் மாத முடிவிற்குள்ளாக தோராயமாக 200 மி.மீ அல்லது அதற்கும் அதிகமாகவோ சற்று குறைவாகவோ மழை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.வடகிழக்கு பருவமழை காலகட்டத்தின் இயல்பான அளவு எனபது 447 மி.மீ அதில் 90% மழை கிடைத்தாலே அது இயல்பான அளவு தான் அதே சமயம் 110% சதவிகிததிற்கு அதிகமான அளவு மழை பதிவானால் அது இயலபுக்கு அதிகம் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆக மொத்தத்தில் 403 மி.மீ அளவு மழை கிடைத்தாலே அது இயல்பான அளவு தான் அக்டோபர் மாதத்திலேயே நமக்கு 200 மி.மீ அளவு மழை கிடைக்கக்கூடிய சூழல் இருப்பதால் அடுத்த 2 மாதங்களில் சாதாரணமாக மழை பதிவானாலே நமக்கு இயல்பான அளவு மழை கிடைத்துவிடும்.
எனது கருத்து :நிகழும் ஆண்டில் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்திலும் சில முறை வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற வாய்ப்புகள் உண்டு ஆகையால் இயல்பான அளவை அடைவதில் எந்த வித சங்கடமும் இந்த ஆண்டு இருக்கப்போவது கிடையாது நாம் எதிர்பார்த்து இருந்தபடி டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பலன் வழங்கும் பட்சத்தில் நமக்கு இயல்புக்கும் அதிகமான அளவு மழை கிடைக்கலாம்.ஆகையால் நிகழும் ஆண்டும் இயல்பு அல்லது இயல்புக்கும் அதிகமான அளவு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.சுழற்சிகள் பலன் வழங்குகிற பட்சத்தில் என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 470 மி.மீ முதல் 520 மி.மீ அளவு வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கடலோர பகுதிகளில் / கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் ?
===========================
எனது பதில் : தற்போதைய சூழல்களை நாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது வட கடலோர மாவட்டங்களுக்கு நிகழும் ஆண்டு இயல்புக்கும் அதிகமான அளவு மழை கிடைக்கலாம் அதாவது திருவள்ளூர் , சென்னை , செங்கல்பட்டு , விழுப்புரம் , புதுச்சேரி , கடலூர் , மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , காரைக்கால் ,திருவாரூர் உட்பட வடகடலோர மற்றும் டெல்டாவின் கடலோர மாவட்டங்களில் / கடலோர பகுதிகளில் இயல்புக்கும் அதிகமான அளவு மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உண்டு.அதேபோல நீலகிரி , தென்காசி , கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இயல்பு அல்லது இயல்புக்கும் அதிகமான அளவு மழை பதிவாகலாம்
தூத்துக்குடி , ராமநாதபுரம் , புதுக்கோட்டை , தஞ்சாவூர் , நெல்லை , உட்பட தென் கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை இந்த காலக்கட்டத்தில் பதிவாகலாம் டிசம்பர் , ஜனவரி மாதங்களிலும் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகும்.
அரியலூர் , திருப்பூர் ,பெரம்பலூர் ,சிவகங்கை , கரூர் , திருவண்ணாமலை , தேனி , காஞ்சிபுரம் , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி , கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் இயல்பான அளவு அல்லது அதற்கும் சற்று குறைவான அல்லது கூடுதலான அளவு மழை பதிவாகலாம்.
மதுரை , திருச்சி , திண்டுக்கல் , கிருஷ்னகிரி , தர்மபுரி ,திருப்பத்தூர் ,சேலம் , ஈரோடு , நாமக்கல் ,விருதுநகர் மாவட்டங்களை பொறுத்தவரையில் சலனங்களின் நகர்வுகள் தான் இயல்பான அளவு மழையா அல்லது குறைவா என்பதனை தீர்மானம் செய்யும்.
எந்தெந்த பகுதிகளில் அதிக கனமழை பதிவாக வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் ?
=================================
டெல்டா மற்றும் அதனை ஒட்டிய /சார்ந்த பகுதிகளில்
=====================================
சிதம்பரம் , சீர்காழி , பரங்கிப்பேட்டை , பிச்சாவரம் , பழையார் , திருமுல்லைவாசல் , பூம்புகார் , தலைஞாயிறு , திருப்பூண்டி , காரைக்கால் , நாகப்பட்டினம் , வேதாரண்யம் , அதிராம்பட்டினம் , மணமேல்குடி
சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களில்
=============================================
கேளம்பாக்கம் , மறைமலைநகர் , மதுராந்தகம் , தாம்பரம் , சோழிங்கநல்லூர் , கல்பாக்கம் , மரக்காணம் , செய்யூர் , (காலாப்பேட் , பாகூர் ) புதுச்சேரி , கடலூர் , மீஞ்சூர் , பொன்னேரி
சென்னை மாநகரில்
================
தண்டையார்பேட்டை , காசிமேடு , ஜார்ஜ்கோட்டை , சாந்தோம் , மயிலாப்பூர் , அடையாறு , வேளச்சேரி , முட்டுக்காடு , புழல் , ஸ்ரீபெரும்புத்தூர் ,பூந்தமல்லி
அணைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாக பதிவிடுவது மிகவும் கடினம் இவைப்போக தூரத்துக்குடி , ராமேஸ்வரம் , பாம்பன் , மண்டபம் , காயல்பட்டினம் , திருச்செந்தூர் , வால்பாறை , கொடைக்கானல் , குன்னூர் , கோத்தகிரி , கொடநாடு , கெட்டி , அமராவதி பகுதிகளிலும் சில காலங்களில் கனமழை பதிவாகலாம்.
உங்களுடைய சந்தேகங்களை கருத்துரை அதாவது Comment செய்யுங்கள் நாம் பதில் வழங்குகிறேன்.
தற்போது நிலவி வரும் சூழல்களுக்கு ஏற்ப நீட்டிக்கப்ட்ட கால இடைவெளியிலான எனது கணிப்புகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.100% சதவிகிதம் இப்படி தான் நடக்கும் என்று நான் கூறவில்லை இப்படியெல்லாம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று பதிவிட்டு இருக்கிறேன்.
வானிலை சூழல்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.
என்றும் உங்களுடன் உங்கள் ' புதுச்சேரி வெதர்மேன் ' இமானுவேல்
Good explanation for north east monsoon
பதிலளிநீக்குExcellent report sir...I think chennai and its suburban sides will receive more rain on this NEM 2021..
பதிலளிநீக்கு