அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?
=======================
01-08-2020 காலை 8:20 மணி நான் கடந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்ததை போல தற்சமயம் தென்மேற்கு திசை காற்றின் வீரியம் தமிழகத்தில் சற்று அதிகரிக்க தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது.
தீவிரமடைய இருக்கும் தென்மேற்கு பருவமழை
===========================
02-08-2020 ஆகிய நாளை முதல் அரபிக்கடல் பகுதியை ஒட்டிய இந்தியாவின் மேற்கு மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தீவிரமடையலாம்.தென்மேற்கு பருவமழை தீவிரமடைய இருக்கும் இந்த முறை தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகலாம் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரையில் அடுத்து வரக்கூடிய வார்த்தில் பதிவாக வாய்ப்புகள் உண்டு.தற்போது வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது நல்ல மழை பதிவாகி வந்தாலும் தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை நிகழும் 2020 ஆம் ஆண்டில் இதுவரையில் பதிவாகவில்லை.இந்த குறைபாட்டை சமன் செய்யும் வகையில் அடுத்து வரக்கூடிய நாட்கள் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களின் நிலவரம்
==============================
நாளை முதல் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பதிவாகி வந்த பரவலான வெப்பசலன மழையின் அளவு குறைய தொடங்கலாம்.பொதுவாக காற்றின் வேகம் முன்பை விட அதிகரித்து காணப்படும் அவ்வப்பொழுது வானம் இருட்டிக்கொண்டு காற்றின் வேகம் அதிகரித்து சில நிமிட சாரல் அல்லது தூரல் அல்லது லேசான மழை அங்கும் இங்குமாக பதிவாகும் சாதகமான சூழல்களை பொறுத்து ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகலாம்.#தாராபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #பாலக்காடு_கணவாய் காற்றுப் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக சுமார் 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் 06-08-2020 அல்லது அதற்கு பிறகு அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.
#கோவை ,#திருப்பூர் ,#தேனி #நெல்லை உட்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை அல்லது சாரல் அங்கும் இங்குமாக அவ்வப்பொழுது அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாகும்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட #கர்நாடகா ,#கேரளா மற்றும் #மஹாராஷ்டிரா மாநில கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கனமழை அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாகும்.இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் #மேட்டூர் அணை உட்பட அனைத்து முக்கிய அனைகளின் நீர்மட்டம் உயர்ந்து அணைகள் நிரம்பும்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் தமிழகத்தில் அதிக மழையை பெற வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================
நீலகிரி மாவட்டம் :
###############
#எருமாடு ,#நெல்லியம் , #அப்பர்பவாணி ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.
கோவை மாவட்டம் :
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.
தேனி மாவட்டம் :
##############
#பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.
கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.
நெல்லை மாவட்டம்:
##############
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.
Predicted by
#Emmanuel_paul_antony
(independent weather forecaster)
#Puducherry_Weather
#tamilnaduweather.com