11.8.24 Due to the change in the speed and direction of wind in lower level, there will be movement of wind discontinuity from the interior parts of Tamil Nadu and Puducherry to the coastal areas. We will call this as a Line of Wind Discontinuity ( LWD). In the upcoming days, there are more chances of very heavy rains in the evening and night in the areas where wind discontinuity occurs. In the last 24 hours, nearly 220 mm of rainfall has been reported in #Villupuram, likewise 142 mm of rainfall in #Gingee and 127 mm of rainfall has been reported in #Tindivanam areas.
In the times like these it is not a good practice to simply take the predictions of the #weather_models as they are..
11.8.24 கீழடுக்கில் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாறுதல்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் உட்பகுதிகள் முதல் கடலோரப் பகுதிகள் வரையில் காற்று முறிவு நகர்வு என்பது ஏற்படும்.இதனை நாம் Line of Wind Discontinuity என்பதைப் போல வழங்குவோம் இனி வரக்கூடிய நாட்களில் காற்று முறிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிக கனத்த மழைக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த மழையானது இன்னமும் பரவலாகவும் அமையலாம்.கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாநகராட்சியில் கிட்டத்தட்ட 220 மிமீ அளவு மழையானது பதிவாகி இருக்கிறது அதேபோல விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிகளில் 142 மிமீ அளவு மழையும் திண்டிவனம் பகுதிகளில் 127 மிமீ அளவு மழையும் பதிவாகி இருக்கிறது..
இதைப்போன்ற காலங்களில் மாதிரிகளின் கணிப்புகளை அப்படியே உள்வாங்குவது என்பது சரியான நெறிமுறையாக இருக்காது
என்றும் உங்களுடன் உங்கள் #இம்மானுவேல்
#TNRains
#Thunderstorm
#ConvectiveRains
#tamilnaduweather
#PYWeatherman