20.5.24 Circulation prevailing in North Kerala and it's adjoining Arabian Sea is intensifying in coastal areas near #Kannur. On the other hand, near Cuddalore district, the circulation in lower level is likely to move eastwards. As you all know that circulation is going to move further eastwards and intensify over the Bay of Bengal in the upcoming days... We have discussed this ,many times before.
From 23.5.24 including Chennai and its suburbs , Puducherry , Karaikal and all the North Coastal Districts, Delta , North interior Districts, the daytime temperatures are very likely to rise. Meanwhile, rains will continue in the Western Ghats and its adjoining areas in the upcoming days as well. Southern Districts Western Ghats and it's adjoining areas are very likely to record heavy to very heavy rains. Needless to say Kerala has high chances of a heavy rains.
In times like this it is foolish to look at the weather models and tell the same story. Realizing that, I think the media and social media should behave with some humanity.
For detailed information - youtu.be/bn_1H7EQxjo
#TNRains
#monsoon2024
#indianmonsoon
#SWM2024
#Southwestmonsoon
20.5.24 வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடலில் நிலவி வந்த சுழற்சி #கண்ணூர் அருகே சுழற்சி கடல் பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. அதேசமயம் கடலூர் மாவட்டம் அருகே கீழடுக்கில் சுழற்சி கிழக்கு நோக்கி நகர முற்பட்டு வருவதையும் உறுதி செய்ய இயல்கிறது. அந்த சுழற்சி மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் வங்க கடல் பகுதிகளில் தீவிரமடைய இருக்கிறது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே... இது தொடர்பாக நாம் முன்னதாகவே நிறைய முறை விவாதித்து விட்டோம்.
23.5.24 ஆகிய மே 23ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகள் உட்பட புதுச்சேரி சுற்றுவட்டார பகுதியில் உட்பட காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளை உட்பட வடகடலோர மாவட்ட பகுதிகள் டெல்டாவின் பகுதிகள் வட உள் மாவட்ட பகுதிகளில் பகல் நேர வெப்பநிலையானது மென்மேலும் உயர்வதற்கான சாத்திய கூறுகள் மிக மிக அதிகமாக இருக்கிறது. அதேசமயம் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் மழை தொடரும். தென்மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இடங்களில் கன மழை முதல் மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம். கேரளாவில் சொல்லவே தேவையில்லை அதிக கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.
இதைப் போன்ற காலங்களில் மாதிரிகளை பார்த்து அப்படியே கதை சொல்வது முட்டாள்தனமானது. அதை உணர்ந்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.
விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/bn_1H7EQxjo