இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 மே, 2024

16.5.24 Cyclonic Circulation affects Delta coasts of tamilnadu and puducherry | Remal cyclone likely to form over Bay of Bengal after may 20

0
16.5.24 காலை 8:35 மணி உங்கள் "#புதுச்சேரி_வெதர்மேன் " #இம்மானுவேல் வழங்கும் உத்தேச வானிலை அறிக்கை 
==================
மே 20 ஆம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் வங்க கடல் பகுதிகளில் (#Remal_cyclone) #ரமல் புயல் உருவாகலாம். தற்சமயம் வடக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கக்கூடிய சுழற்சியின் காரணமாக நாம் எதிர்பார்த்திருந்த பகுதிகள் பலவற்றில் கனமழை பதிவாகி கொண்டிருப்பதை நம்மால் உறுதி செய்ய இயல்கிறது. 

👉 கடந்த 24 மணி நேரத்தில் #பட்டுக்கோட்டை பகுதிகளில் 158 மிமீ அளவு மழையும் #சிவகங்கை மாவட்டம் #சிங்கம்புணரி சுற்று வட்டாரப் பகுதிகளில் 136 மிமீ அளவு மழையும் #மன்னார்குடி பகுதிகளில் 131 மிமீ அளவு மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மழை பதிவாகி இருக்கக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் #காரைக்கால் பகுதிகளில் 66 மிமீ அளவு மழை பதிவாகி தொடர்ந்தும் வருகிறது.

👉தற்சமயம் #மயிலாடுதுறை , #காரைக்கால் , #கும்பகோணம் , #நாகபட்டினம் , #திருவாரூர் , #சிதம்பரம்  சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #அரியலூர் , #பெரம்பலூர் , #சேலம் , #கள்ளக்குறிச்சி , #கடலூர் ,  #மயிலாடுதுறை , #காரைக்கால் , #நாகப்பட்டினம் , #திருவாரூர் மாவட்ட பகுதிகள் மற்றும் #தஞ்சாவூர் மாவட்ட கிழக்கு பகுதிகளில் மிகப் பரவலாக மழை மேகங்கள் பதிவாகி வருகிறது. மேலும் #விழுப்புரம் , #காஞ்சிபுரம் ,  #செங்கல்பட்டு மற்றும் #திருவண்ணாமலை மற்றும் #தர்மபுரி மாவட்ட மேற்கு பகுதிகளிலும் பரவலான மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.

👉வங்கக்கடலில் 20 ஆம் தேதிக்குப் பிறகு #Remal புயல் உருவாக இருப்பதன் காரணமாக.19.5.24 அதாவது மே மாதம் 19ஆம் தேதி வாக்கிலேயே தெற்கு கேரள கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மேற்கு திசை காற்றின் தீவிரத் தன்மை அதிகரிக்கும். ஆகையால் மே மாதம் 19,20,21,22 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனத்த மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் பல தகவல்களுடன் உங்களை குரல் பதிவில் சந்திக்கிறேன்...

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் #இம்மானுவேல் இம்மானுவேல்🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக