1.5.24 உங்கள் #புதுச்சேரி_வெதர்மேன் #இமானுவேல் வழங்கும் வானிலை குறிப்பு
===============
நிகழும் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் #பொள்ளாச்சி பகுதியில் 42.3 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது அதுவும் கூட குளிர்காலத்தில் பதிவான மழை தான் வெப்பசலனம் மழை காலகட்டத்தில் இதுவரையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் #பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் துளி அளவு கூட மழை பதிவானதாக மழைமாளிகள் தகவல்களில் இல்லை. மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும் அங்கு தென்னை மரங்கள் வாடி இருப்பதை காணொளிகளின் வாயிலாக காணும் பொழுது கண்ணீர் துளிகள் எண்ணம் அரியாமல் ஆழ் மனதில் பெருக்கடிக்கிறது. ஆனபொழுதும் இந்த நிலை மே மாதத்தில் மெல்ல மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அது மட்டுமல்லாது தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மிகச் சிறப்பாக பதிவாகி மேற்கு மாவட்டங்களில் வறட்சியை போக்கும் என்பதில் ஐயப்பாடு வேண்டாம். நம்பிக்கையுடன் மழைக்காக காத்திருங்கள்.
நிகழும் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் #கோவை மாவட்டத்தில் பதிவான மழை அளவுகள் பின்வருமாறு
===============
சர்கரபட்டி - 82 மிமீ
ஆழியார் - 69 மிமீ
சேத்துமடை - 61 மிமீ
பொள்ளாச்சி PWD - 60 மிமீ
பொள்ளாச்சி - 42 மிமீ
கோபாலபுரம் - 37 மிமீ
கோவிந்தபுரம் - 36 மிமீ
V K புதூர் - 31 மிமீ
ஆனைமலை - 31 மிமீ
மீனாட்சிபுரம் - 27 மிமீ
கிணத்துக்கடவு - 14 மிமீ
இதில் ஆனைமலை பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் premonsoon மழை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1.5.24 Weather report from your #Puducherry_Weatherman #Emanuel
================
In the year 2024, 42.3 mm of rain has been recorded in #Pollachi area so far and that too is the rain recorded in winter during the tropical monsoon season. So far in March and April in the surrounding areas of #Pollachi there has not been a single drop of rain reported. This is especially sad for the West and West Inner Districts, where watching videos of coconut trees withering brings tears to one's mind. However, I am sure that this situation will slowly change in May and not only that, the Southwest Monsoon will be very good this year and will relieve the drought in the western districts. Wait for the rain with hope.
Following is the rainfall recorded in #Coimbatore district so far in the year 2024
================
Sakarapathi - 82 mm
Aliyar - 69 mm
Setumadai - 61 mm
Pollachi PWD - 60 mm
Pollachi - 42 mm
Gopalapuram - 37 mm
Govindapuram - 36 mm
V K pudur - 31 mm
Anaimalai - 31 mm
Meenakshipuram - 27 mm
Kinathukkadavu - 14 mm
It is noteworthy that the premonsoon rains have not started in other parts of Anaimalai.