இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

27.2.24 Enso Transition and other natural parameters that affects the current weather patterns of tamilnadu and puducherry | Shortrange forecast for tamilnadu and puducherry

0
27.2.24 காலை 10:00 மணி அடிரியாடிக் கடல் ( #adriaticsea ) , டெரிஹெனியன் கடல் ( #tyrrheniansea ) கடல் உட்பட மெடிட்டேரிய ( #medditeraneansea ) மற்றும் கருங்கடல் (#Blacksea) பகுதிகளில் மிகச் சிறப்பான சூழல்கள் தற்போது நிலவிக் கொண்டிருப்பதனால்...
👉மேற்கத்திய கலக்கத்தின் தாக்கம் ( impact of the Western disturbance) 
=========================
 மேற்கத்திய கலகத்தின் (#Western_disturbance) தாக்கம் அடுத்து வரக்கூடிய மார்ச் மாதத்திலும் அதிகரித்தே வட மற்றும் வட மேற்கு இந்திய பகுதிகளில் காணப்படும் இமயமலை அடிவாரப் பகுதிகளுக்கு கனத்த மழைக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அடுத்து பிறக்க இருக்கும் மார்ச் மாத முதல் மற்றும் இரண்டாம் நாளில் இந்திய நாட்டின் வடகோடி மாநிலங்களில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் ஆங்காங்கே கனத்த மழைக்கும் வாய்ப்புகள் உண்டு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்படலாம். அதற்கு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேற்கத்திய கழகத்தின் தாக்கமானது நாட்டின் வடகோடி பகுதிகளில் அதிகரிக்கும்.

👉அரபிக்கடல் கடல் பரப்பு வெப்பநிலை (SST of the Arabian sea)
===========================
அரபிக்கடல் பகுதிகளின் கடல் பரப்பு வெப்பநிலை பல இடங்களில் இயல்பை விட அதிகரித்து உள்ளது சோமாலியாவுக்கு ( #somalia ) நெருக்கத்தில் பூமத்திய ரேகை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பரப்பிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அரபிக் கடல் கடல் பரப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் ராஜஸ்தானின் தார்பாலைவன ( #thardesert ) காற்று கீழடுக்கில் அரபிக் கடல் நோக்கி தென்கிழக்கு திசையில் தற்சமயம் வீசி வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் தெற்கு இந்திய பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு என்பது தடுக்க இயலாத ஒன்று கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழும் ஆண்டு பகல் நேர வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் அதிகரித்து தான் இருக்கும்.

👉எல்நினோ தெற்கு அலைவு ( El nino southern oscillation and it's phase transition)
=====================
பூமத்திய ரேகை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய பசுபிக் கடல் பரப்பில் கடல் பரப்பு வெப்பநிலை அதிகரிக்க தொடங்கி விட்டது ஆகையால் விரைவில் மேற்கு பசிபிக் கடல் பரப்பிலும் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் விரைவில் எளினோ தெற்கு அறைவு அடுத்த சில மாதங்களில் அதனுடைய நடுநிலையான கட்டத்தை எட்டி விடும் ( மே/ஜூன் மாத வாக்கில் அல்லது அதற்கு முன்னதாக இது நிகழ்ந்தாலும் ஆச்சரியம் கொள்ள தேவையில்லை) #Elnino to #enso  #neutral transformation.

அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கும் கூடுதல் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் எல்நிநோ தெற்கு அலைவில் ஏற்பட இருக்க கூடிய மாறுதல்கள் இவை தவிர்த்து பூமத்திய ரேகை ஒட்டி இருக்கக்கூடிய மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேலும் வெப்பம் உயரும் என்கிற எதிர்பார்ப்பு இவை அனைத்தும் #தென்மேற்கு_பருவமழை ( #Southwestmonsoon) சாதகமான ஒன்றாக அமைவதற்கான சூழல்கள் உள்ளது என்பதை உறுதி செய்யக்கூடிய ஆற்றலாக விளங்குகிறது.ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை நாட்டில் அதிக மழை பொழிவை ஏற்படுத்தலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பொறுத்தவரையில் அவைகள் மழை மறைவு பகுதிகள் தான் ஆனபொழுதும் மேற்கு திசை காற்றின் வீரியம் குறைந்து இருக்கக்கூடிய தருணத்தில் அவ்வப்பொழுது வெப்ப சலனமழைக்கு வாய்ப்புகள் உண்டு. ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் சில நேரங்களில் வடகடலோர மாவட்டங்களில் கூட வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

👉மார்ச் மாதத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கான வானிலை எதிர்பார்ப்பு
=====================
அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் அதிகரிக்கக்கூடும் ஏற்கனவே மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் உட்பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக உயர்ந்திருக்கிறது மார்ச் மாத முதல் வாரத்திற்கு பிறகு #வேலூர் , #திருவண்ணாமலை , #திருப்பத்தூர் , #இராணிபேட்டை , #தூத்துக்குடி , #விருதுநகர் , #மதுரை , #கரூர் , #ஈரோடு , #திருச்சி , #பெரம்பலூர் , #திருப்பூர் , #சேலம் , #சிவங்கங்கை , #இராமநாதபுரம் , #புதுக்கோட்டை , #தர்மபுரி  ,#கிருஷ்ணகிரி , #சென்னை  , #கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

👉எனது எதிர்பார்ப்பு
==================
ஏற்கனவே #ஈரோடு மாநகர உட்பட ஈரோடு மாவட்டத்திலும் மேற்கு மற்றும் மேற்கோள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து தான் இருக்கிறது இப்பொழுது நான் கூறக்கூடிய சில பகுதிகளில் மார்ச் மாத முதல் வாரத்திற்கு பிறகு அதிக அளவில் வெப்பநிலை மாறுதல்கள் அதாவது வெப்பநிலை உயர்வு என்பது ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அந்தந்த பகுதிகள் பின்வருமாறு #மேட்டூர் , #ஓமலூர் , #சேலம் , #தர்மபுரி , #ஒக்கேனக்கல் , #பாலக்கோடு , #பென்னாகரம் , #ராயக்கோட்டை , #காவிரிபட்டினம் , #கிருஷ்ணகிரி , #பர்கூர் , #போச்சம்பள்ளி , #மாத்தூர் , #திருப்பத்தூர் , #நாட்றம்பள்ளி , #ஆம்பூர்  , #ஆலங்காயம் , #போளூர் , #செங்கம் , #அரூர் , #தண்டராம்பட்டு , #சங்கராபுரம் , #கள்ளக்குறிச்சி , #திருவண்ணாமலை , #ஆரணி, #சேத்துப்பட்டு, #வேலூர் , #கண்ணமங்கலம் , #பள்ளிகொண்டா , #குடியாத்தம் , #திருத்தணி , #காட்பாடி , #சோளிங்கர் , #நாமக்கல் , #துறையூர் , #திருச்சி போன்ற பல இடங்களில் வெப்பநிலை அதிகரிப்பு அதிகமாக இருக்கும் பல பகுதிகளையும் எழுத்துப்பூர்வமாக பதிவிடுவது கடினம் குரல் பதிவில் இன்னும் நிறைய விஷயங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்த வாரம் தமிழக வெப்பசலன மழை வாய்ப்புகள் தொடர்பாக சில தகவல்களை விரிவாக உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

என்றும் உங்களுடன் உங்கள்  #இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக