இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 நவம்பர், 2022

16.11.22 A new circulation formed over bay of bengal | third active spells of North East monsoon 2022 | last 24 hrs rainfall data

0
16.11.22 முன்னதாக நாம் எதிர்பார்த்திருந்ததைப் போலவே தற்பொழுது வங்க கடல் பகுதிகளில் குறிப்பாக அந்தமானை ஒட்டி இருக்கக்கூடிய வங்க கடல் பகுதிகளில் ஒரு சுழற்சியானது நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த சுழற்சியானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை எட்டி விடலாம். அதன் பிறகு அதற்கு அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் அது மென்மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது அது மட்டுமல்லாது அது மேற்கு வடமேற்கு திசையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் நகர முற்படும்.

அந்த சுழற்சி தீவிரமடைந்து 2022 நவம்பர்  18 அல்லது 19ஆம் தேதிகளின் வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதன் பிறகு வரக்கூடிய நாட்களில் தமிழக டெல்டா மாவட்ட பகுதிகள் மற்றும் வடகடலோர மாவட்ட பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பதிவாகுவதற்கான சூழல்களும் ஏற்படலாம். அதாவது மூன்றாவது சுற்று வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்திலும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்க கூடிய இடங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 121 மிமீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது. விரிவான அடுத்த 24 மணி நேரம் மழை வாய்ப்புகளை அறிய - https://youtu.be/C-ZcI8ZXhwo

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
இராஜபாளையம் (விருதுநகர்) 121மிமீ

ஆயக்குடி (தென்காசி) 88மிமீ

சிவகிரி (தென்காசி) 66மிமீ

கருப்பாநதி அணை (தென்காசி) 60.5மிமீ

தென்காசி (தென்காசி) 55மிமீ

வத்ராப் (விருதுநகர்) 54மிமீ

கடனாநதி அணை (தென்காசி) 40மிமீ

ஊத்து (திருநெல்வேலி) 36மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி) 30மிமீ

குண்டாறு அணை (தென்காசி) 29.8மிமீ

மாஞ்சோலை (திருநெல்வேலி) 29மிமீ

அடவிநயினார் அணை (தென்காசி) 27மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 26.4மிமீ

லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 26மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 25.6மிமீ

கழுகுமலை (தூத்துக்குடி) 25மிமீ

சேர்வலாறு (திருநெல்வேலி),பார்வுட் (நீலகிரி) 24மிமீ

நாலுமுக்கு (திருநெல்வேலி),சங்கரன்கோவில் (தென்காசி) 22மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 21.8மிமீ

ராமாநதி அணை (தென்காசி) 20மிமீ

காக்கச்சி (திருநெல்வேலி),சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 17மிமீ

ஶ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 15.3மிமீ

முக்கூடல் அணை (கன்னியாகுமரி) 14மிமீ

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 13.5மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 9.4மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 9மிமீ

கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 8.5மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 8.4மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 8மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்) 7.6மிமீ

சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 7.5மிமீ

ஆயங்குடி (புதுக்கோட்டை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 7.2மிமீ

திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) 6மிமீ

காயல்பட்டினம் (தூத்துக்குடி) 5மிமீ

திருவாடனை (இராமநாதபுரம்), திருவையாறு (தஞ்சாவூர்) 6மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 5.4மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 5மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 4.8மிமீ

களக்காடு (திருநெல்வேலி),திருநெல்வேலி (திருநெல்வேலி) 4.6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 4.4மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 4.2மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி),புத்தன் அணை (கன்னியாகுமரி) 4மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி),பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 3.6மிமீ

கொடைக்கானல் BOAT CLUB (திண்டுக்கல்) 3.1மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி), மஞ்சளாறு அணை (தேனி),ஆனைகிடங்கு (கன்னியாகுமரி), அப்பர் பவானி (நீலகிரி) 3மிமீ

மாம்பழதுறையாறு அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 2.6மிமீ

போடிநாயக்கனூர் (தேனி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்)  2.4மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 2.2மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு),செய்யூர் (செங்கல்பட்டு),அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சோத்துப்பாறை அணை (தேனி) 2மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை) 1.4மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),கொட்டாரம் (கன்னியாகுமரி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி) 1.2மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு), மஞ்சலாறு (தஞ்சாவூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), குன்னூர் (நீலகிரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இமானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக