இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 அக்டோபர், 2022

27.10.22 The prevailing circulation over Southwest Bay of Bengal may weaken completely in the next 24 hours so there is a possibility of rain at various places in coastal districts of Tamil Nadu including Chennai and Puducherry around midnight tonight or early tomorrow.

0
27.10.22 தற்சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட கடலோர மாவட்டங்களுக்கு கிழக்கே இருக்கும் கடல் பகுதிகளில் ஒரு வலு குறைந்த கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் அது முற்றிலும் வலு விழந்து போகலாம்.அதேசமயம் நாளை அல்லது நாளை மறுநாள் தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய சுழற்சி உருவாகும்.

அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகலாம்.#புதுச்சேரி மற்றும் #சென்னை மாவட்டங்களிலும் வட கடலோர பகுதிகளிலும் , தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை உண்டு.

#கேளம்பாக்கம் , #கல்பாக்கம் , #மாமல்லபுரம் , #பரங்கிப்பேட்டை , #பிச்சாவரம் பகுதிகளில் சில இடங்களில் வலுவான மழைக்கும் வாய்ப்புகள் உண்டு.விரிவான வானிலை அறிக்கை மற்றும் மழை வாய்ப்புகளுக்கு - https://youtu.be/xA-HhsRykQc

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
தூத்துக்குடி New PORT (தூத்துக்குடி) 82.8மிமீ

தூத்துக்குடி PORT AWS (தூத்துக்குடி) 72.5மிமீ

கடம்பூர் (தூத்துக்குடி) 53மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 31மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்) 27மிமீ

கயத்தாறு ARG (தூத்துக்குடி) 26.5மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி) 25மிமீ

கழுகுமலை (தூத்துக்குடி) 24மிமீ

சிவகாசி RDO அலுவலகம் (விருதுநகர்) 15.2மிமீ

காயல்பட்டிணம் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி) 15மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 10.6மிமீ

குலசேகரப்பட்டிணம் (தூத்துக்குடி) 12மிமீ

பேரையூர் (மதுரை) 4.2மிமீ

GOOD WILL SCHOOL வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 3.5மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 3.2மிமீ

MRC நகர் (சென்னை) 3மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 2.2மிமீ

கீழ்ரசடி (தூத்துக்குடி) நுங்கம்பாக்கம் (சென்னை), கோவில்பட்டி (தூத்துக்குடி) 2மிமீ

கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி),திருப்பதிச்சாரம்_AMFU ARG (கன்னியாகுமரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக