4.9.22 அடுத்த 72 மணி நேரத்தில் அதாவது 7.9.22 ஆம் தேதி வாக்கில் வங்க கடல் பகுதிகளில் ஆந்திராவை ஒட்டிய கடல் பரப்பில் ஒரு புதிய சுழற்சி உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் ஏழாம் தேதி முதல் அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளுக்கு மிக சிறப்பான சூழல்கள் நிலவும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அலுவல்கள் நிறைய இருப்பதன் விளைவாக அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு என்னால் சரிவர பதிவுகளை பதிவிட இயலாது என்பதை வருத்தத்துடன் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக உட்பகுதிகளில் மேற்கோள் மாவட்ட பகுதிகளில் வடமேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே தரமான இடியுடன் கூடிய வெப்ப சலன மழை பதிவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எந்தெந்த குறிப்பிட்ட பகுதிகளில் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பது தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்ள - https://youtu.be/p9-c8tzukQg
கடந்த 24 மணி நேர மழையளவுகள் பட்டியல்
==================
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 68.4மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 67.1மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 63மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 58மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 55.5மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி),பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 54.8மிமீ
பையூர்_AMFU ARG (தர்மபுரி) 54.5மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 54மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 52.4மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 42.8மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 34.3மிமீ
திருமங்கலம் (மதுரை) 33.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 29மிமீ
மணப்பாறை (திருச்சி) 27.8மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 25.4மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 25மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 24.8மிமீ
தேவாலா (நீலகிரி) 24மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 21மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 20மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 19.4மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 18மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 17மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 16மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 15.1மிமீ
மயிலம்பட்டி (கரூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 15மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 14.8மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 12.6மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 10.9மிமீ
வீரகன்னூர் (சேலம்), பஞ்சபட்டி (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) 10மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 9.5மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 9.2மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 9மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 8.4மிமீ
ஆத்தூர் (சேலம்) 7.8மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 7.5மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 7.2மிமீ
திருச்சி TOWN (திருச்சி), தோகைமலை (கரூர்) 7மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 6.8மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை), குளச்சல் (கன்னியாகுமரி) 6மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 5.2மிமீ
கள்ளிக்குடி (மதுரை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 4.8மிமீ
களியல் (கன்னியாகுமரி) 4.4மிமீ
தாளவாடி (ஈரோடு), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), குண்டடம் (திருப்பூர்), தர்மபுரி (தர்மபுரி),சேரங்கோடு (நீலகிரி) 4மிமீ
ஏற்காடு (சேலம்) 3.2மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 3.1மிமீ
தென்பறநாடு (திருச்சி) 3மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 2.6மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை),பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 2.1மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), TNAU CRI ஏத்தாபூர் (சேலம்),ஜீ பஜார் (நீலகிரி) 2மிமீ
பெரியார் (தேனி) 1.8மிமீ
தேக்கடி (தேனி) 1.4மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி), பார்வுட் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல் 🙏