#அல்பெலியன் நிகழ்வினால் பூமி குளிரப்போகுது மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை போன்ற ஒரு வதந்தி #Whatsapp இல் உலா வந்து கொண்டு இருக்கிறது.இது உண்மை தானா என்று என்னை நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டு இருந்தீர்கள்.முதலில் அல்பெலியன் என்ற சொல்லே தவறு அது #அஃபிலியன் நிகழ்வு
அது தொடர்பான என்னுடைய விளக்கங்களை இப்போது வழங்க தொடங்குகிறேன்.
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மேன் ' #இம்மானுவேல்
#Aphelion (#அஃபிலியன்) நிகழ்வு என்றால் என்ன?
================
பூமி சூரியனை சுற்றி வரும் சுற்றுப்பாதையின் ஒரு முனைக்கும் சூரியனுக்கும் உள்ள அதிகபட்ச தூரம் 15.2 கோடி கி.மீ. இந்த அதிகபட்ச தூரமுள்ள முனையை #Aphelion - (#அஃபிலியன் ) என்று கிரேக்க மொழியில் வழங்குவார்கள்.இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3/4 ஆம் தேதிகளில் நிகழும்.மற்றபடி #Aphelion - (#அஃபிலியன் ) என்பது ஒரு அறிவியல் சொல்லோ /விதியோ /கோட்பாடோ கிடையாது.
#Perihelion (#பெரிகீலியன்) நிகழ்வு என்றால் என்ன?
================
பூமி சூரியனை சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதையின் ஒரு முனைக்கும் சூரியனுக்கும் உள்ள குறைந்தபட்ச தூரம் 14.7 கோடி கி.மீ இந்த குறைந்தபட்ச தூரமுள்ள முனையை கிரேக்க மொழியில் #Perihelion (#பெரிகீலியன் ) என்று வழங்குவார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3/4 ஆம் தேதிகளில் நிகழும்.
இந்த நிகழ்வின் காரணமாக பூமி முழுவதும் குளிரடையுமா / வெப்பம் அடையுமா?
=================
நமது பூமி 23.5° சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றி வருகிறது.அவ்வாறு அது சூரியனை சுற்றி வரும் போது குறைந்த தூரமான #Perihelion (#பெரிகீலியன் )முனையை ஜனவரி 3/4 ஆம் தேதி அடைகையில் சூரியனின் கதிர்கள் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் செங்குத்தாகப்படும் ஆகவே அதனை ஒட்டிய முன்பின் மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம்.அதேசமயம் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கும் நமக்கு அது குளிர்காலம்.அதே சமயம் அதிக தூரமான #Aphelion (#அஃபிலியன் ) முனையை ஜூலை 3/4 தேதி அடைகையில் சூரியனின் கதிர்கள் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் செங்குத்தாகப்படும் ஆகையால் அம்மாதத்தை ஒட்டிய முன்பின் மாதங்களில் வட அரைக்கோளத்தில் கோடைகாலம் அதேபோல தெற்கு அரைக்கோளத்தில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் அங்கு குளிர்காலம்.
இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிய வந்திருக்கும் என நினைக்கிறேன்.ஊடங்களில் வெளியாகி வரும் செய்திகள் மற்றும் #Whatsapp இல் பரவி வரும் வதந்திகள் போல எதுவும் நிகழப்போவது கிடையாது.செய்தி ஊடங்கங்கள் செய்திகளை வெளியிடும் முன் விபரம் அறிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு அறிந்து தெளிவு பெற்ற பின்னர் செய்திகளை வெளியிடுவது ஆகச் சிறந்தது.
இது தொடர்பான ஒரு விரிவான காணொளியை விரைவில் நமது ' ARIVUPPASI ' channel இல் பதிவு செய்கிறேன்.
அனைவரும் வீன் வதந்திகளை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருங்கள்.
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மேன் ' #இம்மானுவேல்