இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஜூன், 2022

3.6.22 Southwest monsoon | today’s weather outlook | Last 24 hours rainfall data | Indian Ocean dipole

0

3.6.22 இப்போது மகாராஷ்டிரம் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு தற்காலிக உயர் அழுத்த நிலவி வருகிறது.


👉 தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று வெகுவாக வீரியம் அடைய தொடங்கும்.


👉 ஜூன் 7-ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள மாநிலத்தில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.


இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம்?

===============

👉மேற்கு உள் மாவட்டங்களில் , வடமேற்கு உள் மாவட்டங்களில் அதேபோல கர்நாடக எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய தமிழகப் பகுதிகளில் , ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கக் கூடிய வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இவையெல்லாம் ஒரு புறமிருக்க உட் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.


👉 #பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளிலும் தெற்கு கர்நாடக மாநில பகுதிகளிலும் சில இடங்களில் தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறுவதற்காக வாய்ப்புகளும் இருக்கிறது. #தர்மபுரி , #கிருஷ்ணகிரி , #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் மற்றும் #சேலம் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகி #திருச்சி மாவட்ட பகுதிகள் போல உட்பகுதிகளிலும் அங்குமிங்குமாக இடியுடன் கூடிய மழை பதிவாகி அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.


👉 மேற்கு திசை காற்றின் தாக்கத்தால் இலங்கையினுடைய தென் மேற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் தென்மேற்கு பருவமழை ஓரளவுக்கு பதிவாக வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.


👉 விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

======================

பெரம்பலூர் (பெரம்பலூர்) 38மிமீ


கெத்தி (நீலகிரி) 32மிமீ


குமாரபாளையம் (நாமக்கல்) 28மிமீ


பார்சன் வாலி (நீலகிரி) 23மிமீ


VCS MILL  அம்முண்டி (வேலூர்) 22.4மிமீ


வேப்பூர் (கடலூர்), கோத்தகிரி (நீலகிரி) 21மிமீ


பொன்னமராவதி (திருச்சி) 18.2மிமீ


எடப்பாடி (சேலம்) 16மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 15.8மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 15.4மிமீ


ஆண்டிபட்டி (மதுரை) 11மிமீ


கோவில்பட்டி (திருச்சி) 10.2மிமீ


குப்பநத்தம் (மதுரை),கரையூர் (புதுக்கோட்டை),போர்த்திமுண்டு (நீலகிரி) 10மிமீ


வாடிப்பட்டி (மதுரை) 9மிமீ


பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 8.5மிமீ


கொடநாடு (நீலகிரி) 7மிமீ


மருங்காபுரி (திருச்சி) 6.4மிமீ


விருதுநகர் (விருதுநகர்) 5.8மிமீ


பவானி (ஈரோடு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி)/ 5மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 4.1மிமீ


வாலாஜா (இராணிப்பேட்டை), அப்பர் பவானி (நீலகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 4மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 3.8மிமீ


குன்னூர் (நீலகிரி) 3மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 2.6மிமீ


அன்னவாசல் (புதுக்கோட்டை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),முக்கூத்தி அணை (நீலகிரி) 2மிமீ


மணப்பாறை (திருச்சி) 1.6மிமீ


புது வேட்டக்குடி (பெரம்பலூர்),பைகாரா (நீலகிரி) தக்கலை (கன்னியாகுமரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக