2.6.22 அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் ? தென்மேற்கு பருவமழை எப்போது தீவிரமடையும்?
====================
மேடன் ஜூலியன் அலைவு ( #madden_julian_oscillation)
############
#MJO ஆனது அதனுடைய எட்டாவது கட்டத்தில் ( #PHASE 8 ) தற்போது நிலை கொண்டிருக்கிறது ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக. நிகழும் ஜூன் மாத மத்தியில் அது இந்தியப் பெருங்கடல் கட்டத்தை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது ஆகையினால் அந்த நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீரியமாக இருக்கக்கூடிய தருணத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்க கூடிய பகுதிகளில் கேரள மாநிலப் பகுதிகளில் , கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இவை தவிர்த்து நாட்டின் மேற்கு கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் கன மழை பதிவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
Indian Ocean Dipole ( #IOD)
##############
#Indian_Ocean_dipole இப்போது அதனுடைய நடுநிலையான கட்டத்தில் இருந்தாலும் அடுத்து வரக்கூடிய மாதங்களில் அது அதனுடைய எதிர்மறையான ( #Negative PHASE ) கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இது தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் இல்லை என்கிற ஒரு கூற்றை நாம் முன்வைக்கும் பொழுதும் இயற்கையின் வழி தனி வழி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதே சமயம் மேற்கு திசை காற்றினுடைய வீரியம் குறைந்து இருக்கக்கூடிய தருணத்தில் தமிழக உட்பகுதிகளில் வெப்பசலன மழை தீவிரமடையும் என்பதும் உங்களுக்குத் தெரிந்த செய்தி தான்.
தென்மேற்கு பருவமழையை பொருத்தவரையில் 2 அல்லது 3 Active Spells ஒட்டுமொத்த கணிப்புகளையும் தலைகீழாக மாற்றும் ஆற்றல் மிக்கது.
Elnino Southern Oscillation ( எல்நினோ தெற்கு அலைவு)
###############
தற்போது பசிபிக் கடல் பரப்பில் லா நினா வுக்கான ( #Lanina) சூழல் நிலவி வருகிறது. இந்த சூழல்களில் மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது அடுத்து வரக்கூடிய சில மாதங்களுக்குப் பிறகு நடுநிலையான ( #Neutral) கட்டமும் பசிபிக் கடல் பரப்பில் நிலவ முற்படலாம். ஆக மொத்தத்தில் நிகழும் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் Weak lanina - Neutral Transformation period.
அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம்?
==============
வங்கக் கடலில் சுழற்சி உருவானால் எந்த நேரத்திலும் தென்மேற்கு பருவக்காற்று வீரியம் பெறும். தற்போதைய நிலைமை கொண்டிருக்கக்கூடிய சூழல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் பார்க்கும்போது ஜூன் 9 அல்லது 10ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவக்காற்று வீரியம் பெறலாம். அந்த நேரத்தில் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பதிவாக மிக ஏதுவான சூழல்கள் உருவாகலாம். அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகப் பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை அங்குமிங்குமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் நிகழும் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழக பகுதிகளில் வெப்ப சலன மழை சிறப்பாக பதிவாக வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகளுக்கும் கனமழை காத்திருக்கிறது.
பருவமழை தீவிரமடைந்து இருக்கக்கூடிய காலகட்டத்தில் குறுகிய நேரத்திற்குள் அதிக அளவிலான மழை இந்த ஆண்டும் பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது கடந்த கால நிகழ்வுகள் நமக்கு அதனை தான் உறுதி செய்கிறது ஆகையினால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகள் மற்றும் கேரள மாநில பகுதிகளில் வசித்து கொண்டு இருக்கக் கூடிய நண்பர்கள் அதற்கு ஆயத்தமாக இருந்து கொள்ளுங்கள்.
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏