3.5.22 நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சுழற்சி உருவாக இருக்கிறது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மென்மேலும் தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகமாகவே இருக்கிறது.
👉அந்த சுழற்சி தீவிரமடைந்து நம்மை விட்டு விலகிச் செல்ல முற்படுகையில் குறிப்பாக மே மாதம் 5,6 ஆம் தேதி முதல் அல்லது அதற்குப் பிறகு வரக்கூடிய நாட்களில் தமிழக கடலோரப் பகுதிகளில் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை ஆனது 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
👉 இம்முறை சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, கடலூர் , நாகப்பட்டினம், காரைக்கால் ,மயிலாடுதுறை, நெய்வேலி , விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , ராணிப்பேட்டை , கும்பகோணம் , திருவாரூர் , வேலூர் , சிதம்பரம் உட்பட வட கடலோர மாவட்ட பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உட்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலையில் இதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிக மாற்றங்கள் உணரப்படலாம்.
👉 திருத்தணி , வேலூர் , ஆம்பூர் , காஞ்சிபுரம் மதுராந்தகம் , செங்கல்பட்டு , தாம்பரம் , நெய்வேலி , விழுப்புரம் , ஜெயங்கொண்டம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , திருக்கோயிலூர் , செஞ்சி , திண்டிவனம் உட்பட பல பகுதிகளில் வறண்ட தரைக் காற்று வெப்ப அலையாக வீசும்.
👉கோவில்பட்டி , கயத்தாறு , சாத்தூர் ,அருப்புக்கோட்டை ,விருதுநகர் , ராஜபாளையம் ,மதுரை , திருப்பரங்குன்றம் , திருமங்கலம் , தாராபுரம் , திருப்பூர் , சென்னிமலை , ஈரோடு , சேலம் , கரூர் , வெள்ளக்கோயில் , உடுமலைப்பேட்டை , திண்டுக்கல் , திருச்சி , தஞ்சாவூர் , பெரம்பலூர் , அரியலூர் , நாமக்கல் , திருநெல்வேலி , சிவகங்கை , புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலையானது அதிகரித்து காணப்படும் நான் மேற்கூறிய நாட்களில் இவையெல்லாம் ஒருபுறமிருக்க மேற்கு மேற்கு மற்றும் பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை மாலை மற்றும் இரவு நேரங்களில் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.
👉இன்றும் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகி விரிவான அறிக்கையை நம்ம பிற்பகல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
கிளன்மோர்கன் (நீலகிரி) 35மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 34மிமீ
காவேரிப்பட்டிணம் (கிருஷ்ணகிரி) 30.5மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 29.2மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு),கொடநாடு (நீலகிரி) 26மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 22.4மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 21மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி) 18மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 17மிமீ
கல்லட்டி (நீலகிரி) 15மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 14.1மிமீ
சென்னிமலை (ஈரோடு) 14மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 13மிமீ
எடப்பாடி (சேலம்) 12.2மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 11.6மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 10மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 9.6மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 9.5மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 9மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 8.2மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 8மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 7.2மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 7.1மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), காங்கேயம் (திருப்பூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ
வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 6.3மிமீ
கெத்தி (நீலகிரி),பார்வுட் (நீலகிரி) 6மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 5.8மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்),பையூர் (கிருஷ்ணகிரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), பர்லியார் (நீலகிரி),நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 5மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 4.4மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), கரூர் பரமத்தி (கரூர்),வரட்டுபள்ளம் (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்) 4மிமீ
புலிபட்டி (மதுரை) 3.8மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்),மசினக்குடி (நீலகிரி) 3மிமீ
பாப்பாரப்பட்டி KVK ARG (தர்மபுரி) 2.5மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்),சிட்டாம்பட்டி (மதுரை) 1.6மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 1.4மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.2மிமீ
பர்லியார் (நீலகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி),தேவாலா (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏