30.5.22 குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மிகச்சிறப்பான சூழல்கள் நிலவி வருகிறது.மேற்கு திசை காற்றானது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகளில் மிக சிறப்பாக குவிந்து வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகள் உட்பட தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
👉அதேசமயம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையினுடைய தென் மேற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
👉கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு பிறகு தீவிரம் எடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலனம் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது கடந்த 24 மணி நேரத்திலும் சில இடங்களில் தரமான மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்களும் கிடைக்க வந்திருக்கிறது.
👉 சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களில் வடதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதனுடைய உக்கிர தன்மையை தற்சமயம் வெளிப்படுத்தி வருகிறது. வரக்கூடிய சில நாட்களுக்கும் வட தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.
👉 அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
பெருங்களூர் (புதுக்கோட்டை) 58மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 52.8மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 51மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 48மிமீ
களியல் (கன்னியாகுமரி) 46மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 39மிமீ
சிட்டராப்பட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 38.7மிமீ
திருச்சி TOWN (திருச்சி) 37மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 34மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 33மிமீ
கோத்தகிரி (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி) 32மிமீ
காரியாப்பட்டி (விருதுநகர்) 30.4மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 30.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 28.4மிமீ
பழனி (திண்டுக்கல்) 27மிமீ
சிற்றாறு -I (கன்னியாகுமரி) 26மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 25.6மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 24.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 21மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 20மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்) 17மிமீ
பெரியகுளம் PTO (தேனி) 16.5மிமீ
துவாக்குடி IMTI (திருச்சி) 16.2மிமீ
பெரியகுளம் (தேனி), பார்சன் வாலி (நீலகிரி) 16மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 15.2மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்),எம்ரேல்டு (நீலகிரி) 14மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 13.2மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 13மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 12.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி),ஆனைமடுவூ அணை (சேலம்), எம்ரேல்டு (நீலகிரி) 11மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10.4மிமீ
திருமங்கலம் (மதுரை) 10.2மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 9.2மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 8.1மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), போர்த்திமுண்டு (நீலகிரி) 8மிமீ
வரட்டுப்பள்ளம் (ஈரோடு),மறநடஹள்ளி (தர்மபுரி), சோத்துப்பாறை (தேனி) 7மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 6.2மிமீ
உசிலம்பட்டி (மதுரை), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 6மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 5.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),கெத்தி (நீலகிரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),தேவாலா (நீலகிரி) 5மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 4.6மிமீ
சாத்தையாறு அணை (மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 4மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி) 3.2மிமீ
மஞ்சளாறு அணை (தேனி) 3மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.2மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்),அவலாஞ்சி (நீலகிரி),கெத்தை அணை (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), குன்னூர் (நீலகிரி) 2மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), வம்பன் KVK_ARG (புதுக்கோட்டை),பையூர்_AMFU AWS (தர்மபுரி) 1.5மிமீ
பெரியார் (தேனி) 1.4மிமீ
அமராவதி அணை (திருப்பூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏