24.5.22 வட கடலோர மாவட்ட நண்பர்கள் உட்பட வட கடலோர மாவட்டத்தை ஒட்டி இருக்கக் கூடிய உட்பகுதிகளில் வசித்துக் கொண்டு இருக்கக்கூடிய தோழர்கள் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள். குறிப்பாக #வேலூர் , #திருத்தணி , #காஞ்சிபுரம் , #ஆற்காடு , #வந்தவாசி , #செஞ்சி , #திண்டிவனம் , #விழுப்புரம் , #திருக்கோயிலூர் , #பெண்ணாடம் , #விருத்தாசலம் , #நெய்வேலி , #கும்பகோணம் ,#தஞ்சாவூர் ,#திருச்சி , #புதுக்கோட்டை , #கீரனூர் ,#முசிறி ,#கரூர் , #பெரம்பலூர் , #அரியலூர் , #ஜெயங்கொண்டம் சுற்றுவட்ட பகுதிகள் உட்பட நான் மேற்குறிப்பிட்டு இருக்கக்கூடிய பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய பல்வேறு இடங்கள் ஆக இருக்கட்டும் அதேபோல அந்தந்த குறிப்பிட்ட மாவட்டங்களாக இருக்கட்டும் பல்வேறு இடங்களிலும் பகல் நேர வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். குறிப்பாக நான் மேற்குறிப்பிட்ட இருக்கக்கூடிய பகுதிகள்ல அதிகபட்சமாக இன்று பகல் நேரத்தில் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பநிலை பகல் நேரத்தில் பதிவாகும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதுமட்டுமல்லாது #சென்னை மாநகர் மற்றும் அதனுடைய புறநகர் பகுதிகள் ஆக இருக்கட்டும் அதேபோல #புதுச்சேரி ,#கடலூர் ,#காரைக்கால் ,#நாகப்பட்டினம் ,#மயிலாடுதுறை மாவட்டம் உட்பட வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் இந்த ஆண்டின் உடைய அதிகபட்ச வெப்பநிலை ஆனது அடுத்து வரக்கூடிய சில நாட்களில் பதிவாக இருக்கிறது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கு உள் , தென் உள் மாவட்டங்களில் , உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலனம் மறைக்கும் மழைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 21.4மிமீ
களியல் (கன்னியாகுமரி) 18.6மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 10மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 8.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 8மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 5.4மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 5மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை),சாத்தையாறு (மதுரை) 4மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 3.4மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 3.2மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி),பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 3மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 2.2மிமீ
வாடிப்பட்டி (மதுரை), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 2மிமீ
தென்காசி (தென்காசி) 1.4மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 1.2மிமீ
பெரியார் (தேனி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி),கடனா நதி (தென்காசி), இரவங்கலார் அணை (தேனி), லோயர் மற்றும் கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏