3.4.22 கடந்த 24 மணி நேரத்தில் #சிவகங்கை மாவட்டம் #தேவகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தமிழகத்தில் அதிகபட்சமாக 76 மி.மீ அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது.
#கும்பகோணம் மற்றும் #தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளிலும் 30 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது
அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது எந்த சில குறிப்பிட்ட பகுதிகளில் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பது தொடர்பான தகவல்களை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் மிக தெளிவாக விவாதிக்கலாம்.
ஏப்ரல் 4 அல்லது 5 ஆம் தேதிகளின் வாக்கில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மீண்டும் ஒரு புதிய சுழற்சியானது உருவாக இருக்கிறது அதனுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பொறுத்தே அதற்கு அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களுக்கான மழை வாய்ப்புகள் தமிழகத்தை பொறுத்தவரையில் அமையும்.
வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே வெப்பச்சலனம் மழை தொடரும்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) - 76 மி.மீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்) - 59 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம்) - 42 மி.மீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 38 மி.மீ
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 32 மி.மீ
கும்பகோணம் ( தஞ்சாவூர் மாவட்டம்) - 31 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) - 28 மி.மீ
போடிநாயக்கனூர் ( தேனி மாவட்டம்) - 23 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) - 10 மி.மீ
பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) - 7 மி.மீ
நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 6 மி.மீ
கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 5 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) - 5 மி.மீ
பாளையங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம்) - 4 மி.மீ
உத்தமபாளையம் ( தேனி மாவட்டம்) - 2 மி.மீ
பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 2 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 1 மி.மீ
மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம்) - 1 மி.மீ
பட்டுக்கோட்டை ( தஞ்சாவூர் மாவட்டம்) - 1 மி.மீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்🙏