31.3.22 ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய சுழற்சி உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
👉3.4.22 அல்லது 4.4.22 ஆம் தேதிகளின் வாக்கில் உருவாகலாம்.தற்போது சுழற்சியானது வியட்நாம் அருகே நிலை கொண்டு உள்ளது.
👉வங்ககடலில் உருவாகும் சுழற்சி அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் தீவிரமடையவும் அதிக வாய்ப்புகள் உண்டு.
👉ஏப்ரல் மாதத்தில் தமிழக மேற்கு , மேற்கு உள் , தென் உள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரத்தில் தரமான வலுவான இடியுடன் கூடிய வெப்பாலன மழை பதிவாகும்.
👉சுழற்சி நகரும் பொழுது தமிழக உட் பகுதிகளில் காற்றின் திசையில் ஏற்படும் மாறுதல்களை பொறுத்து சில பல சம்பவங்களும் காத்திருக்கிறது.
👉ஏப்ரல் மாதத்தில் #தூத்துக்குடி நகர பகுதிக்கும் மழை வாய்ப்புகள் சில நாட்கள் உண்டு.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
கொடநாடு (நீலகிரி) 45மிமீ
கிண்ணகோரை (நீலகிரி) 44மிமீ
தாளவாடி (ஈரோடு) 24மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 23.6மிமீ
கெத்தை அணை (நீலகிரி) 20மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 8.4மிமீ
கெத்தி (நீலகிரி) 7மிமீ
குன்னூர் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
தென்காசி (தென்காசி) 4.4மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 4.2மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),நடுவட்டம் (நீலகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 4மிமீ
செங்கோட்டை (தென்காசி),அவலாஞ்சி (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 3மிமீ
வால்பாறை pap (கோயம்புத்தூர்),கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), எம்ரேல்டு (நீலகிரி),பார்வுட் (நீலகிரி),தேவாலா (நீலகிரி) 2மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் '🙏