11.2.2022 காலை 10:00 மணி #காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது காலை 8:30 மணி வரையில் 30 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேசமயம் , தமிழகத்தில் அதிகபட்சமாக #நாகபட்டினம் மாவட்டம் #கோடியக்கரை பகுதிகளில் 80 மி.மீ அளவு மழை பதிவானது.
👉நாளை தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு நாளை மறுநாளும் மழை உண்டு.
👉டெல்டா மாவட்டங்களில் நாளையும் மழை பதிவாகலாம் குறிப்பாக #நாகை மாவட்ட தெற்கு பகுதிகளில் மழை உண்டு.
👉14.2.2022 ஆம் தேதி முதல் மழை குறையும் மீண்டும் 20.2.2022 ஆம் தேதிக்கு பிறகு மழை வாய்ப்புகள் உருவாகலாம்.
மேலும் நாம் கடந்த குரல் பதிவில் எதிர்பார்த்து இருந்தது போல #சீர்காழி , #மயிலாடுதுறை மற்றும் #பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் தற்போது மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==============
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 80மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 69.2மிமீ
திருபூண்டி (நாகப்பட்டினம்) 46.2மிமீ
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 44மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 32மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 30.4மிமீ
திருக்குவளை (நாகப்பட்டினம்) 30மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 23.2மிமீ
திருவாரூர் தாலுகா அலுவலகம் (திருவாரூர்) 20.6மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 18.8மிமீ
மனமேல்குடி (புதுக்கோட்டை), குடவாசல் (திருவாரூர்) 10மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 8.8மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 8.2மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 5மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை),மீமிசல் (புதுக்கோட்டை) 4.2மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 4மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 3.8மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 3.4மிமீ
நன்னிலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்) 2.2மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 2மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மண் ' #இமானுவேல்