8.1.22 மேற்கத்திய கலக்கம் (#western_disturbance) தற்சமயம் மேலடுக்கு சுழற்சி என்கிற நிலையில் #பாகிஸ்தான் நாட்டில் கீழ் மற்றும் மத்திய அடுக்கில் நிலவி வருகிறது.
👉தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஈரப்பதம் அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகரிக்க உள்ளது.
👉 கீழடுக்கில் அடுத்து வரக்கூடிய நாட்களில் அரபிக்கடல் பகுதிகளிலும் ஈரப்பதம் அதிகரிக்கும்.
👉கடந்த 24 மணி நேரத்தில் பிளவுக்கள் அனை பகுதிகளில் அதிகபட்சமாக 60 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
=================
👉10.1.22 ஆம் தேதியன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழையும் பதிவாகலாம்.
👉அதற்கு அடுத்த 2/3 நாட்களில் தமிழகத்திலும் சில இடங்களில் வலுவான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
மழை வாய்ப்புகள்
==============
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
👉#நெல்லை மாவட்ட பகுதிகளின் சில் இடங்களிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வட தமிழகத்தின் சில இடங்களிலும் மழை பதிவாகலாம் விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
👉கேரள மாநிலத்திலும் தெற்கு கடலோர ,தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று மழை உண்டு.
👉இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழையும் பதிவாகலாம்.
👉இலங்கை மற்றும் கேரள மாநில விரிவான மழை வாய்ப்புகளையும் பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 60.2மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 9மிமீ
மஞ்சளாறு அணை (தேனி) 8மிமீ
வத்ராப் (விருதுநகர்) 6.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 6மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 5.6மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 5.4மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி) 5.3மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 4.2மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 2.2மிமீ
மேலூர் (மதுரை) 2மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 1.5மிமீ
ஆண்டிப்பட்டி (தேனி) 1.4மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 1.1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் '