இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 டிசம்பர், 2021

8.12.21 Today's weather | upcoming hours rain possibilities | மழை வாய்ப்புகள் | இன்றைய வானிலை

0

8.12.21 நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்தது போலவே இரவு நேரமாகிய தற்சமயம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட கிழக்கு இலங்கையின் கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் திரள தொடங்கியது.

முன்னதாக இலங்கையின் தென் கிழக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் மழை பதிவானதாக தகவல்களும் கிடைக்க வந்தது.

👉அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தமிழக கடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் நாளை மழை பதிவாகலாம்.

👉#சென்னை , #புதுச்சேரி , #செங்கல்பட்டு  , #கடலூர் , #விழுப்புரம் , #திருவள்ளூர் , #மாயிலாடுதுறை , #காரைக்கால் , #திருவாரூர் , #நாகப்பட்டினம் , #தஞ்சாவூர் , #புதுக்கோட்டை , #ராமநாதபுரம் , #தூத்துக்குடி மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் ஆங்காங்கே அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம்.

👉அதன் பின்னர் #நெல்லை , #தென்காசி , #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகள் உட்பட தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

👉நாளை தென் உள் , மேற்கு உள் மற்றும் உள் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

#யாழப்பானம் உட்பட #இலங்கை யின் வடக்கு பகுதிகளிலும் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய நேரங்களில் மழை பதிவாகலாம்.

அடுத்து வரக்கூடிய நாட்களிலும் கடலோர மாவட்டங்களில் மழை உண்டு.

நிகழ்நேர தகவல்கள்
===============
தற்சமயம் #முல்லைத்தீவு - #திருகோணமலை இடைப்பட்ட அநேக பகுதிகளிலும் பரவலாக மழை மேகங்கள் ராடார் படங்களில் பதிவாகி வருகிறது #புல்மோடை , #அடம்பனை , #நிலவேலி பகுதிகளில் பரவலாக மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.

#திருவண்ணாமலை மாவட்டம் #தவளக்குளம் , #வேட்டவளம் மற்றும் #மலையனூர் - #பெண்ணாத்தூர் இடைப்பட்ட பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 50.8மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 47மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 30மிமீ

கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 26.1மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 19.5மிமீ

பர்லியார் (நீலகிரி) 15மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 13.8மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 13.4மிமீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி) 12.8மிமீ

சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 9.6மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 9.2மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி) 9மிமீ

பேச்சிப்பாறை கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 8.4மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 6.1மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 5.6மிமீ

முசிறி (திருச்சி), பொன்னேரி (திருவள்ளூர்) 5மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 4.2மிமீ

ஒகேனக்கல் (தர்மபுரி), குன்னூர் PTO (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 4மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ

குன்னூர் (நீலகிரி),கிண்ணக்கோரை (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 2மிமீ

வத்ராப் (விருதுநகர்) 1.2மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்), VCS MILL அம்முடி (வேலூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்


என்றும் உங்களுடன்  உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக