டிசம்பர் மாதத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம்?2022 இல் பனிப்பொழிவு எப்படி இருக்கலாம்?
=================
உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் வழங்கும் முதற்கட்ட உத்தேச நீட்டிக்கப்பட்ட கால அளவிலான வானிலை அறிக்கை
பதிவிடப்படும் நாள் : 7.12.21 நேரம் காலை 11:00 மணி
👉அடுத்து வரக்கூடிய நாட்களில் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய சுழற்சி உருவாக இருக்கிறது.
👉அதன் பிறகு அந்த சுழற்சி கிழக்கில் இருந்து மேற்காக நகரும் 9.12.21 ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகும்.
👉மேற்கத்திய கலக்கத்தின் தாக்கமும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வட இந்தியாவில் அதிகரிக்க உள்ளது.
👉 பூமத்திய ரேகையை ஒட்டிய தென்கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தெற்கு அரைக்கோலத்தில் நமது வடக்கு அரைக்கோல சுழற்சிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
வாய்ப்பு 1 :
==========
🔴பூமியின் தெற்கு அரைக்கோலத்தில் இருக்கும் சுழற்சி தீவிரம் அடையாமல் வலுக்குறைய தொடங்கலாம் அந்த நேரத்தில் அதாவது 13.12.21 ஆம் தேதி வாக்கில் நம்முடைய வடக்கு அரைக்கோல சுழற்சி சற்று தீவிரமடையலாம் அதே சமயம் மத்திய மற்றும் மேல் அடுக்கில் மேற்கத்திய கலக்கத்தின் தாக்கமும் சற்று அதிகரிக்கும் பொழுது சுழற்சி தெற்கு இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளை நெருங்க முற்படலாம் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் #டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.#காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் டிசம்பர் 13 அல்லது அதற்கு பிறகு சில நாட்களில் தொடர் கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட கடலோரங்களிலும் மழை சற்று அதிகரிக்கலாம்.
👉இலங்கையில் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம் குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில்.
வாய்ப்பு 2:
==========
🔴சுழற்சி தீவிரமடையாமல் மேலடுக்கு சுழற்சி என்கிற நிலையிலயே பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தெற்கு அரபிக்கடல் வரை பயணிக்கும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் குமரிக்கடல் பகுதிக்கு கீழே நகர்ந்து அரபிக்கடல் பகுதிகளை அடையும் பொழுது சற்று வலுவடையும் இதிலும் தென் மற்றும் #டெல்டா மாவட்டங்களுக்கு மழை வாய்ப்புகள் உறுதி.
👉இலங்கையிலும் கனமழை உறுதி வடகிழக்கு கடலோர பகுதிகளில் தொடர் கனமழைக்கும் வாய்ப்புகள் உண்டு.
வாய்ப்பு 3 :
===========
🔴சுழற்சி உருவாக தெற்கு அரைக்கோலத்தில் நிலவும் சிறப்பான சூழல்கள் மற்றும் சுழற்சிகளின் காரணமாக வட அரைக்கோல சுழற்சி வலுவிழந்து போவது.
👉ஆனால் இதற்கான வாய்ப்புகள் 20% சதவிகிதம் மட்டுமே...
இந்த வாய்ப்பிலும் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் அதிகாலை மற்றும் அதனை ஒட்டிய காலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் மழை உண்டு.
நான் கூறவருவது என்ன?
==================
முதல் இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்று அரங்கேற அதிக வாய்ப்புகள் உண்டு.இரண்டு வாய்ப்புகளுமே #டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு சாதகமாக தான் உள்ளது.
அடுத்தடுத்து சுழற்சிகள் உருவாகும் பொழுதும் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்கள் பலனடையும்.
👉டிசம்பர் மாதத்தின் அடுத்து வரக்கூடிய நாட்கள் மற்றும் 2022 ஜனவரி மாதத்தின் சில நாட்களிலும் கடலோர மாவட்டங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகும்.
அடுத்து வரக்கூடிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டா?
=====================
ஆம் , உண்டு
👉டெல்டா , தென் மேற்கு மற்றும் தென் கடலோர மாவட்டங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
2022 - பின் பனிக்காலம் இயல்பை விட அதிகரிக்கலாம்.
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
மணப்பாறை (திருச்சி) 274.6மிமீ
ஆயக்குடி (தென்காசி) 101மிமீ
பெரியார் (தேனி) 81மிமீ
குண்டாறு (தென்காசி) 70மிமீ
தென்காசி (தென்காசி) 51.4மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 51மிமீ
மோகனூர் (நாமக்கல்) 50மிமீ
செங்கோட்டை (தென்காசி) 49மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 40மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 38மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 36.4மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 34.5மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), பென்னாகரம் (தர்மபுரி) 32மிமீ
மருங்காபுரி (திருச்சி) 31.4மிமீ
தேக்கடி (தேனி), ஒகேனக்கல் (தர்மபுரி) 28மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 25மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 24.6மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 24மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை), விருத்தாசலம் (கடலூர்) 20மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்) 19மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 18.6மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 17.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 16மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்) 15மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), பெருந்துறை (ஈரோடு), அண்ணாமலை நகர் (கடலூர்) 14மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 13.4மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 13.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 13மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), குடியாத்தம் (வேலூர்) 12.2மிமீ
பஞ்சபட்டி (கரூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 12மிமீ
வேலூர் (வேலூர்) 11.8மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 11.2மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை), கரூர் (கரூர்), திருவாரூர் (திருவாரூர்), தக்கலை (கன்னியாகுமரி) 11மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை),புலிவலம் (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்) 10மிமீ
ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 9.4மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 9மிமீ
அவிநாசி (திருப்பூர்) 8.4மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 8.1மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி),குடிதாங்கி (கடலூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), தோகைமலை (கரூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 7.3மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 7மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), இரணியல் (கன்னியாகுமரி) 6.4மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி),பையூர் AWS (கிருஷ்ணகிரி) 6மிமீ
சேரன்மகாதேவி (திருநெல்வேலி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 5.8மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 5.3மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 5.2மிமீ
நாமக்கல் (நாமக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 4.8மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி), சிதம்பரம் (கடலூர்) 4.4மிமீ
திருபூண்டி (நாகப்பட்டினம்), கொடுமுடி (ஈரோடு) 4.2மிமீ
கடல்குடி (தூத்துக்குடி), ஆயங்குடி (புதுக்கோட்டை), இராசிபுரம் (நாமக்கல்), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), தர்மபுரி PTO (தர்மபுரி), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 4மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),மயிலம்பட்டி(கரூர்),கெத்தி (நீலகிரி), பண்ருட்டி (கடலூர்) 3மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 2.4மிமீ
ஏற்காடு (சேலம்) 2.2மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்),கிண்ணக்கோரை (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), அரூர் (தர்மபுரி),ஆனைமடுவு அணை (சேலம்),வானமாதேவி (கடலூர்),தேவாலா (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), ஆண்டிமடம் (அரியலூர்), புதுச்சேரி (புதுச்சேரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி), சீர்காழி (மயிலாடுதுறை) 2மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 1.8மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 1.7மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 1.6மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை), சேலம் (சேலம்) 1.4மிமீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி),லக்கூர் (கடலூர்),TNAU CRIஏதாபூர் (சேலம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), குன்னூர் (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), செய்யாறு (திருவண்ணாமலை) 1மிமீ
