இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 டிசம்பர், 2021

3.12.21 JAWAD Cyclone | ஜாவத்புயல் | Today's weather | last 24 hours rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

3.12.21 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் #JAWAD ( #ஜாவத்புயல்) வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் உருவாக இருக்கிறது.உருவாகி விட்டதாக அடுத்த சில மணி நேரங்களில் அறிக்கை வெளியாகலாம்.

👉04.12.21 ஆகிய நாளை அது வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படும் அதன் பின் அங்கு சாதகமான சூழல்கள் இல்லை என்கிற பட்சத்தில் வட-வடகிழக்கு திசையில் Recurve அடித்து கடலோர பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளிலயே நகர்ந்து 06.12.21 /07.12.21 ஆம் தேதி வாக்கில் வங்க தேசத்தின் கடலோர பகுதிகளை வலு குறைந்து அடையும்.

👉4.12.21 ஆகிய நாளை முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை தீவிரமடையும் உட் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய வலுவான கனமழை ஆங்காங்கே பதிவாகக்கூடும்.

👉வங்கதேசத்தில் வலுவிழந்த சுழற்சியின் தாக்கத்தால் உருவான மழை மேகங்கள் கீழடுக்கு காற்றின் தாக்கத்தால் 8.12.21 அல்லது 9.12.21 மற்றும் 10.12.21 ஆம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளை அடையும்.அப்பொழுது கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.

👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு , மேற்கு உள் மற்றும் தமிழக உட் பகுதிகளில் மழை வாய்ப்புகள் உண்டு.

👉விரிவான அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================

ஆயக்குடி (தென்காசி) 76மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 72மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 67மிமீ

சிவகிரி (தென்காசி) 61மிமீ

பெரியார் (தேனி) 44.6மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 44.2மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 42.4மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 38மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி), சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 36.8மிமீ

நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 34மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி) 32மிமீ

கோயம்புத்தூர் AMFU AWS (கோயம்புத்தூர்) 31மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 29.4மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 26மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 22.4மிமீ

தென்காசி (தென்காசி) 20.4மிமீ

கெத்தி (நீலகிரி) 17மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 14.2மிமீ

பர்லியார் (நீலகிரி) 14மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 13.4மிமீ

பெரியகுளம் (தேனி), கோவை தெற்கு) கோயம்புத்தூர்) 13மிமீ

களியல் (கன்னியாகுமரி) 12.4மிமீ

பணங்குடி (திருநெல்வேலி) 11மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி) 10மிமீ

தேக்கடி (தேனி) 8.6மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 8மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 6.4மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 6மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 5.4மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 5.2மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 5மிமீ

இரணியல் (கன்னியாகுமரி) 4.6மிமீ

அன்னூர் (கோயம்புத்தூர்) 4.2மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),சின்னகல்லார்) கோயம்புத்தூர்) 4மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 3.2மிமீ

ராதாபுரம் (திருநெல்வேலி), குன்னூர் (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), மனல்மேல்குடி (புதுக்கோட்டை),செருமுல்லி (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ

ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்) 2.5மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 2.4மிமீ

செங்கோட்டை (தென்காசி),அடார் எஸ்டேட் (நீலகிரி), அவுடையார்கோவில் (புதுக்கோட்டை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 2மிமீ

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி) 1.4மிமீ

கல்லட்டி (நீலகிரி) 1.2மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்), உத்தமபாளையம் (தேனி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்


என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக