11.11.21 காலை 10:30 மணி தற்சமயம் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ( #Depression) வட சென்னை மற்றும் #பழவேற்காடு பகுதிக்கு கிழக்கே இருக்கும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது மேற்கு - வட மேற்கு திசையில் பயணிக்க உள்ளது.
இன்று மாலை அது #பழவேற்காடு ஏரியை நெருங்கி அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் வடசென்னை - நெல்லூர் இடைப்பட்ட கடலோர பகுதிகளில் அது கரையை கடக்கலாம்.
மாலை வரையில் அவ்வப்பொழுது #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம் பெரும்பாலும் அது தொடர் கனமழையாக இருக்க வைப்புகக் இல்லை.
தற்சமயம் #தாம்பரம் உட்பட #சென்னை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் காற்று சில நேரங்களில் வேகம் எடுக்கலாம் அவ்வப்போது மழையும் சில இடங்களில் பதிவாகலாம்.அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் காற்றின் வேகம் இயல்பை அடையலாம்.
மாலை வரையில் அங்கும் இங்குமாக #சென்னை மற்றும் அதனை ஒட்டிய #திருவள்ளூர் மற்றும் #செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது சில நேரங்களில் மழை பதிவாகலாம்.
#வடசென்னை மற்றும் #புலிகேட் ஏரியை ஒட்டிய இடங்களில் மாலை வரையில் அவ்வப்பொழுது மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கலாம்.
மற்றபடி அச்சம் கொள்ளும் அளவுக்கான சூழல்கள் எதுவும் தற்சமயம் இல்லை.
மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் நீர் முழுவதுமாக வடிய நாம் காத்திருக்க வேண்டும்.
கடந்த 24 மணி நேர சில பகுதிகளின் மழை அளவுகள்
===================
தாம்பரம் - 233 மி.மீ
சோழவரம் - 220 மி.மீ
என்னூர் AWS - 207 மி.மீ
கும்மிடிப்பூண்டி - 184 மி.மீ
செங்குன்றம் - 180 மி.மீ
மாமல்லபுரம் - 168 மி.மீ
மயிலாப்பூர் - 157 மி.மீ
நுங்கம்பாக்கம் - 157 மி.மீ
பெரம்பூர் - 157 மி.மீ
தாமரைப்பாக்கம் - 149 மி.மீ
அம்பத்தூர் - 148 மி.மீ
MGR நகர் - 145 மி.மீ
மீனம்பாக்கம் - 144 மி.மீ
அயனாவரம் - 144 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் - 139 மி.மீ
செம்பரம்பாக்கம் - 135 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 134 மி.மீ
பொன்னேரி - 125 மி.மீ
ஆலந்தூர் - 121 மி.மீ
முழுமையான மழை அளவுகள் பட்டியலை www.tamilnaduweather.com இணையதளத்தில் பிற்பகலில் பதிவுசெய்கிறேன்.
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்