இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 நவம்பர், 2021

Depression formed over bay of Bengal | likely to reach NTC tonight/ tomorrow | இன்றைய வானிலை | தமிழக வானிலை | மழை அளவுகள்

0
10.11.21 காலை 11:00 மணி அடுத்த சில மணி நேரங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( #Depression) உருவாகி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகலாம்.

👉நேற்றைய நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர பதிவில் நான் உங்களிடம் குறிப்பிட்டு கூறியிருந்ததை போல சுழற்சி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக ( #well_marked_low_pressure_area)  உருவெடுத்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிட்டு விட்டது.

👉அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து விட்டதாகவும் அறிக்கை வெளியாகலாம்.

👉10.11.21 ஆகிய இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடைந்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கு எதுவும் இல்லை.

👉அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் மட்டுமல்லாது அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை - #புதுச்சேரி சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மற்றும் #புறவழிசாலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.

👉#சென்னை - #நெல்லூர் இடைப்பட்ட பகுதிகளிலும் கனமழை உண்டு.

👉#புலிகேட் அதாவது #பழவேற்காடு பகுதிகளிலும் கனமழை உறுதி.

காற்றின் வேக அதிகரிப்பு
==================
#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் , #புதுச்சேரி , #கடலூர் , #செங்கல்பட்டு , #திருவள்ளூர் , #விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ முதல் 60 மி.மீ வேகத்தில் இன்று மாலை/இரவு மற்றும் நாளை அதிகாலை /காலை நேரங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

#டெல்டா மாவட்டங்களில் இன்று மணிக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசலாம்.

மேலும் பல தகவல்களை அடுத்த சில மணி நேரங்களில் விவாதிக்கலாம்.

#puducherry - #chennai be ready

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================

புதுச்சேரி மாநிலத்தில் #காரைக்கால் பகுதியில் 287 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி யில் 95 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

தமிழக மழை அளவுகள்
====================
நாகப்பட்டினம் - 310 மி.மீ
திருப்பூண்டி - 309 மி.மீ
வேதாரண்யம் - 257 மி.மீ
தலைஞாயிறு - 239 மி.மீ
திருத்துறைப்பூண்டி - 216 மி.மீ
பேராவீரணி - 196 மி.மீ
திருவாரூர் - 186 மி.மீ
கரம்பக்குடி - 176 மி.மீ
ஈச்சன்விடுதி - 172 மி.மீ
தஞ்சாவூர் - 161 மி.மீ
தரங்கம்பாடி - 159 மி.மீ
பட்டுக்கோட்டை - 153 மி.மீ
மதுக்கூர் - 146 மி.மீ
மன்னார்குடி - 140 மி.மீ
மயிலாடுதுறை - 139 மி.மீ
முத்துப்பேட்டை - 134 மி.மீ
நன்னிலம் - 134 மி.மீ
பரங்கிப்பேட்டை - 129 மி.மீ
சீர்காழி - 127 மி.மீ
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக