இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 நவம்பர், 2021

New UAC is formed over Southeast Bay of Bengal due to this a low pressure area likely to form today/tomorrow | வங்கக்கடலில் அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0
8.11.21 தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது.

👉கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( #Depression) நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வளுக்குறைய தொடங்க உள்ளது அதனுடைய தாக்கம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்துள்ளது.

👉தென்கிழக்கு வங்கக்கடலில் இருக்கும் சுழற்சி தீவிரமடைய இருக்கிறது தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருக்கும் சுழற்சியும் இதுவும் ஒன்றாக இணைந்துவிடும் இதனை ( #Fujiwara_effect) என்று வழங்குவோம்.

👉அதன் பின் அந்த சுழற்சி மேலும் தீவிரமடைந்து தென்மேற்கு வங்கக்கடலை அடைந்து நவம்பர் 10 அல்லது நவம்பர் 11 ஆம் தேதி வாக்கில் அது வட தமிழகத்தை நெருங்க முற்படலாம்.

இன்றைய வானிலை
==============
தற்சமயம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.

👉அடுத்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி - #பரங்கிப்பேட்டை மற்றும் #பரங்கிப்பேட்டை - #சீர்காழி இடைப்பட்ட பகுதிகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.

👉#காரைக்கால் , #நாகப்பட்டினம் , #மயிலாடுதுறை , #திருவாரூர்  மாவட்ட பகுதிகள் உட்பட டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு

👉#கடலூர் , #புதுச்சேரி , #விழுப்புரம் மாவட்ட உட்பகுதிகளிலும் சில இடங்களில் வலுவான மழை பதிவாகலாம்.

👉#சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உண்டு இரவு /நள்ளிரவு / அதிகாலை நேரங்களில் மழையின் அளவு அதிகரிக்கலாம்.

👉#தூத்துக்குடி , #இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளிலும் மழை உண்டு இவைப்போக உட் பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகும்.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 137.4மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு) 132.2மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு) 126மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 125மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 103மிமீ

வில்லியனூர் (புதுச்சேரி) 100மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 94மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 91மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 90.5மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 90.2மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 89மிமீ

அம்பத்தூர் (சென்னை) 88மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 86.4மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்) 86மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 85மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 84.4மிமீ

கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 83மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 82மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 78.6மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 78மிமீ

மயிலாப்பூர் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை) 76.4மிமீ

மரக்காணம் (விழுப்புரம்) 76மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 74மிமீ

ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) 71.6மிமீ

வல்லம் (விழுப்புரம்) 70மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 69.8மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 69மிமீ

நீமோர் (விழுப்புரம்) 68மிமீ

வல்லவனூர் (விழுப்புரம்) 67மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை)65.4மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 64.7மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), கடலூர் IMD (கடலூர்) 63.2மிமீ

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்),மூகையூர் (விழுப்புரம்) 63மிமீ

கோழியனூர் (விழுப்புரம்) 60மிமீ

மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 59.4மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 59மிமீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர்),பூண்டி (திருவள்ளூர்) 58மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 57மிமீ
 
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 56மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 55.8மிமீ

காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 55.5மிமீ

மனப்பூண்டி (விழுப்புரம்) 54மிமீ

மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 51மிமீ

கேதர் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) 50மிமீ

காரைக்கால் (புதுச்சேரி) 48மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 46.2மிமீ

சூரபட்டு (விழுப்புரம்) 46மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 45.6மிமீ

கஞ்சனூர் (விழுப்புரம்) 45மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 44.3மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை),தென்பறநாடு (திருச்சி), தரமணி (சென்னை) 44மிமீ

மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 43.4மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 43.3மிமீ

BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), நந்தனம் (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்) 43மிமீ

ஆனந்தபுரம் (விழுப்புரம்) 42மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 41.2மிமீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), விழுப்புரம் (விழுப்புரம்) 41மிமீ

முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 40.5மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்) 40மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 39மிமீ

சிதம்பரம் (கடலூர்) 38.8மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 38.2மிமீ

கொரட்டூர் (திருவள்ளூர்),ஏத்தாபூர் (சேலம்) 38மிமீ

BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 37மிமீ

திருத்தணி (திருவள்ளூர்), பாம்பன் (இராமநாதபுரம்),மேல் ஆலத்தூர் (வேலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 36மிமீ

புவனகிரி (கடலூர்) 35மிமீ

ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்) 34.6மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 34.2மிமீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), பண்ருட்டி (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்)  34மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 33மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 32.6மிமீ

 DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), செய்யாறு (திருவண்ணாமலை), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 32மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 31மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 30மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 29.6மிமீ

பொன்னை அணை (வேலூர்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 29மிமீ

ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 28.4மிமீ

DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குடியாத்தம் (வேலூர்) 28மிமீ

வானமாதேவி (கடலூர்) 27.6மிமீ

குடவாசல் (திருவாரூர்) 27.2மிமீ
 
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி),குடிதாங்கி (கடலூர்) 27மிமீ

BASL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),வடகுத்து (கடலூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 26மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 25மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 23.6மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 23மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 22.6மிமீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை),தளுத்தலை (பெரம்பலூர்), ஆத்தூர் (சேலம்), மண்டபம் (இராமநாதபுரம்) 22மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 21.5மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 21.1மிமீ

DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி), வானூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 21மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 20.6மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 20.2மிமீ

DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கங்கவள்ளி (சேலம்), வேப்பூர் (கடலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 20மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்) 19.4மிமீ

கட்டுமயிலூர் (கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), காட்பாடி (வேலூர்) 19மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 18.6மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்),லாக்கூர் (கடலூர்), செஞ்சி (விழுப்புரம்), பேரையூர் (மதுரை), அரசூர் (விழுப்புரம்),செம்மேடு (விழுப்புரம்) 18மிமீ

பொழந்துறை (கடலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருப்பத்தூர் (சிவகங்கை) 17.2மிமீ

KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி), வளத்தி (விழுப்புரம்),விரகனூர் (சேலம்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), இலுப்பூர் (புதுக்கோட்டை) 17மிமீ

வேலூர் (வேலூர்) 16.9மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 16.4மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி),ஆனைமடுவு அணை (சேலம்) 16மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 15.6மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 15.5மிமீ

பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), காரைக்குடி (சிவகங்கை), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 15மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்),பாண்டவையாறு தலைப்பு (திருச்சி) 14.4மிமீ

கிள்செருவை (கடலூர்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 14மிமீ

செந்துறை (அரியலூர்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 13.2மிமீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி),பாலமோர்குளம் (இராமநாதபுரம்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 13மிமீ

ஏற்காடு (சேலம்) 12.6மிமீ

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), துறையூர் (திருச்சி),காரியாக்கோவில் அணை (சேலம்),பரூர் (கிருஷ்ணகிரி), 12மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 11.6மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 11.4மிமீ

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி), சேந்தமங்கலம் (நாமக்கல்) 11மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 10.4மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 10.1மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை),கொப்பம்பட்டி (திருச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்),எறையூர் (பெரம்பலூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 10மிமீ

அரியலூர் (அரியலூர்) 9.4மிமீ

மன்னார்குடி (திருவாரூர்), திருச்சி TOWN (திருச்சி) 9மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்) 8.6மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்),பிளவுக்கல் அணை (விருதுநகர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 8.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்), வைப்பார் (தூத்துக்குடி) 8மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 7.8மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்) 7.6மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 7மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),சூரங்குடி (தூத்துக்குடி), தர்மபுரி (தர்மபுரி) 6மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 5.8மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருவையாறு (தஞ்சாவூர்) 5மிமீ

திருமானூர் (அரியலூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 4.4மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்) 3மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்), சாத்தூர் (விருதுநகர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 2மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 1.8மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்), எட்டயபுரம் (தூத்துக்குடி), பவானி (ஈரோடு), முத்துப்பேட்டை(திருவாரூர்) 1.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.2மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி),கீழ்அரசடி (தூத்துக்குடி),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), தூத்துக்குடி (தூத்துக்குடி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), திருச்செந்தூர் (தூத்துக்குடி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்



என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் 

Updations going on ....
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக