இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 அக்டோபர், 2021

Low pressure likely to hit srilanka and tamilnadu coast | 27.10.2021 today's weather | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

27.10.2021 காலை 11:10 மணி உங்கள் '#புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல் வழக்கும் முதல் சுற்று வடகிழக்கு பருவமழை தொடர்பான அறிக்கை.28.10.2021 ( அக்டோபர் 28) ஆம் தேதி முதல் முதல் சுற்று வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

வானிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் துல்லியமாக அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.

👉தற்சமயம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

👉அந்த மேலடுக்கு சுழற்சி அடுத்த சில மணி நேரங்களில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை அடைய உள்ளது ( #Low_pressure_area)

👉மேலும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் நிலைக்கொள்ள உள்ளது அதன் பின் தமிழக நிலப்பகுதிகளில் ஊடுருவி அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 31.10.2021 அல்லது 01.11.2021 ஆம் தேதி வாக்கில் அது அரபிக்கடல் பகுதியை அடைய முற்படலாம்.

👉அதன் பின் மீண்டும் ஒரு வலுக்குறைந்த சுழற்சி அதாவது காற்றழுத்த தாழ்வு பகுதி / மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையில் நிலைக்கொள்ளலாம்.

தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கை
==================
👉28.10.2021 ஆகிய நாளை முதல் அந்த சுழற்சியின் நகர்வுகளுக்கு ஏற்ப மாலை அல்லது இரவு நேரங்களில் வடகடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் 29.10.2021 தேதி முதல் கனமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பதிவாகலாம்.

👉கேரள மாநில நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பு தான் கடும் மழையை சந்தித்தார்கள் அடுத்த பிறக்க இருக்கும் நவம்பர் மாதத்திலும் கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.

👉நவம்பர் முதல் வாரத்திலும் தமிழகத்தில் மழை தொடரும்.

👉நவம்பரில் தமிழக உட் பகுதிகளிலும் மழை உண்டு.

மேலும் பல சுவரசியமான தகவல்கள் நாம் தொடர்ந்து விவாதிக்கலாம்.தொடர்ந்து நமது பக்கங்களுடன் இணைந்திருங்கள்.

எங்களின் பதிவுகளை தொடர்ந்து காண

Tamil weather vlog : http://www. youtube.com/c/tamilweathervlog

Puducherry weatherman - https://www.facebook.com/puduvaiweatherman/

கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
===================
தமிழகத்தில் கடந்த (27\10/2021)  24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-

தூத்துக்குடி (தூத்துக்குடி) 44.2மிமீ

காயல்பட்டினம் (தூத்துக்குடி),பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 43மிமீ

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 39மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 32.2மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 28.8மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 28மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 27.6மிமீ

வைப்பார் (தூத்துக்குடி) 26மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 24மிமீ

PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 23.4மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 23மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு) 21மிமீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி) 19மிமீ

குண்டடம் (திருப்பூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்) 17.4மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 16.2மிமீ

PWD அலுவலகம் குமாரபாளையம் (நாமக்கல்) 15.8மிமீ

பாம்பன் (இராமநாதபுரம்) 15.6மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்) 15மிமீ

குண்டேரிபள்ளம்(ஈரோடு),கிடேய் (நீலகிரி), வரட்டுபள்ளம் (ஈரோடு) 14மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 13.8மிமீ

இளையான்குடி (சிவகங்கை) 13மிமீ

குன்னூர் PTO (கோயம்புத்தூர்) 12.5மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 12.4மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 12.2மிமீ

அன்னூர் (கோயம்புத்தூர்) 12மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 11.6மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), ஊத்துக்குளி (திருப்பூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ

மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 10.8மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்), சென்னிமலை (ஈரோடு),கிண்ணகோரை (நீலகிரி) 10மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 9.6மிமீ

திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிவலோகம் (கன்னியாகுமரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 9மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 8.8மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 8.6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.4மிமீ

பல்லடம் (திருப்பூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), அப்பர் பவானி (நீலகிரி) 8மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 7.2மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 7மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 6.2மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்),பர்லியார் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 6மிமீ

சூலூர் (கோயம்புத்தூர்) 5.5மிமீ

திருமங்கலம் (மதுரை),திருவாடனை (இராமநாதபுரம்) 5.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 5.1மிமீ

கீழ்அரசடி (தூத்துக்குடி), ராதாபுரம் (திருநெல்வேலி), பெரியார் (தேனி),களியல் (கன்னியாகுமரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 4.4மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 4.3மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 4.2மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி),குன்னூர் (நீலகிரி),தேவாலா (நீலகிரி) 4மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி),மைலாடி (கன்னியாகுமரி) 3.2மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்),நடுவட்டம் (நீலகிரி),தக்கலை (கன்னியாகுமரி) அவலாஞ்சி (நீலகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), எம்ரேல்டு (நீலகிரி) 3மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பவானிசாகர் அணை (ஈரோடு), இரணியல் (கன்னியாகுமரி) 2.4மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), கொடிவேரி அணை (ஈரோடு) 2.2மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), அவிநாசி (திருப்பூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), கல்லட்டி (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி) 2மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 1.7மிமீ

திருவாரூர் (திருவாரூர்), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 1.2மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்), சின்கோனா (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), உத்தமபாளையம் (தேனி), திருமூர்த்தி IB (திருப்பூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' புதுச்சேரி வெதர்மன் ' இமானுவேல்


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக