15.10.2021 காலை 11:00 மணி இன்று இரவு அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதியானது கேரளாவின் கடலோர பகுதிகளை நெருங்கும் நாளை அதாவது 16.10.2021 அன்று அது கேரளாவின் கடலோர பகுதிகளை கடந்து நிலப்பகுதிக்குள் நுழைந்து கிழக்கு நோக்கி நகர இருக்கிறது அக்டொபர் மாதங்களில் இது ஒரு அரிதான சம்பவம் என்று தான் கூற வேண்டும்.
மிககனமழை எச்சரிக்கை
===============
அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம் குறிப்பாக 16.10.2021 ஆகிய நாளை அல்லது 17.10.2021 ஆகிய நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை.
நீலகிரி , வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டம்மிட்டு இருப்பவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு அதனை ஒத்திவையுங்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நிலச்சரிவுகள் பல்வேறு இடங்களிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அரங்கேறலாம்.உங்கள் நண்பர்கள் யாரேனும் நீலகிரி மற்றும் வால்பாறைக்கு சுற்றுலா சென்று இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.
சுழற்சி எந்த இடத்தில் கரையை கடக்கும்?
================
இது புயலோ அல்லது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமோ கிடையாது ஒரு வலுக்குறைந்த சுழற்சி தான் ஆகையால் அதன் மையப்பகுதி விரிவடைந்து இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நம்மால் கூற இயலாது.அதே சமயம் அது #கேரள மாநில மத்திய பகுதிகளை நெருங்கி அதன் பின் நிலப்பகுதியை அடையலாம்.
சுழற்சி வலுக்குறைந்ததாக இருந்தாலும் அவை சமவெளி பதிகளில் பயணிப்பதும் மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து பயணப்பதும் வித்தியாசமானது மேலும் அது நிலப்பகுதிக்குள் நகர்கையில் மேற்கு திசை காற்றை தம்வசம் இழுக்கும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை உறுதி.
கேரளாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்புகள் உண்டு.
தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று இரவு மழை அதிகரிக்கும்
=====================
அந்த சுழற்சி கேரளாவின் மத்திய கடலோர பகுதிகளை இன்று இரவு நெருங்கம் பட்சத்தில் முதலாவதாக தமிழக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை தீவிரம் பெறலாம்.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட , வட கடலோர மற்றும் #டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை கடந்த நாட்களில் பதிவாகியதை போலவே பதிவாக இருக்கிறது.விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
16.10.2021 ஆகிய நாளை தமிழகத்தில் பரவலான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
கவுந்தப்பாடி (ஈரோடு) 80.4மிமீ
மே.மாத்தூர்(கடலூர்) 68மிமீ
வேப்பூர் (கடலூர்) 53மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 47.2மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 46மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 45.1மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 45மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 44.4மிமீ
பையூர் ARG (கிருஷ்ணகிரி) 43மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 39மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 38மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 34.6மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 33.2மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 32மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 30.4மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 30மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்), லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 29.8மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 28மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 26மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 25மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 24மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 23மிமீ
மானாமதுரை (சிவகங்கை), பென்னாகரம் (தர்மபுரி) 22மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), திருச்செங்கோடு (நாமக்கல்), விருத்தாசலம் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 20மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 19.2மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை),சேரங்கோடு (நீலகிரி) 19மிமீ
பவானி (ஈரோடு) 18மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 17.8மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),தொண்டி (இராமநாதபுரம்) 17மிமீ
Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 16மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), திருமானூர் (அரியலூர்) 15.2மிமீ
KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி) 15மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 14.4மிமீ
DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), பண்ருட்டி (கடலூர்) 14மிமீ
வம்பன் ARG (புதுக்கோட்டை), நெய்வேலி AWS (கடலூர்) 13.5மிமீ
கிள்செருவை (கடலூர்) 13.3மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி),திருபூண்டி (நாகப்பட்டினம்) 13.2மிமீ
பெரியார் (தேனி),வடகுத்து (கடலூர்),கொத்தவச்சேரி (கடலூர்) 13மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 12.8மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 12.6மிமீ
பொழந்துறை (கடலூர்), குமாரபாளையம் (நாமக்கல்) 12.2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கடலூர் IMD (கடலூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 12மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 11.3மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), சிற்றாறு-11 (கன்னியாகுமரி) 11.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 11மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10.5மிமீ
பொன்னை அணை (வேலூர்) 10.4மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 10.1மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), அகரம் சிகூர் (பெரம்பலூர்) 10மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 9.5மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 9.4மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை) 9மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.6மிமீ
காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 8.5மிமீ
தேவகோட்டை (சிவகங்கை),உத்திரமேரூர்(காஞ்சிபுரம்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) 8மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), போளூர் (திருவண்ணாமலை) 7.8மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 7.5மிமீ
அரியலூர் (அரியலூர்) 7.4மிமீ
GOLDEN ROCK'-பொன்மலை (திருச்சி) 7.2மிமீ
தேக்கடி (தேனி), கோத்தகிரி (நீலகிரி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),தேவாலா (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 7மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 6.6மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 6.4மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), பாபநாசம் (தஞ்சாவூர்) 6.2மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), நம்பியூர் (ஈரோடு) 6மிமீ
கமுதி (இராமநாதபுரம்), தர்மபுரி PTO (தர்மபுரி) 5.8மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 5.4மிமீ
மருங்காபுரி (திருச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 5.2மிமீ
திருச்சி TOWN'(திருச்சி), மேல் ஆலத்தூர் (வேலூர்) 5.1மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்), அரூர் (தர்மபுரி),களியல் (கன்னியாகுமரி) 5மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 4.8மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 4.6மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 4.3மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 4.2மிமீ
தென்பறநாடு(திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),ஈரோடு (ஈரோடு),வானமாதேவி (கடலூர்), வானூர் (விழுப்புரம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்),நடுவட்டம் (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) 4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 3.5மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 3.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 3மிமீ
மணப்பாறை (திருச்சி) 2.8மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்) 2.6மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.4மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 2.2மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை),ஜீ பஜார் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), கொடநாடு (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), செந்துறை (அரியலூர்),அவலாஞ்சி (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), குருங்குளம் (தஞ்சாவூர்),அப்பர் கூடலூர் (நீலகிரி), கொடிவேரி அணை (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), லால்பேட்டை (கடலூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு), செங்கோட்டை (தென்காசி),பார்வுட் (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்) 2மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 1.8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 1.7மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 1.4மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 1.3மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 1.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 1.1மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை),ஏரையூர் (பெரம்பலூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), KCS MILL-2 மோராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), செஞ்சி (விழுப்புரம்), சிதம்பரம் (கடலூர்),செருமுல்லி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல் 🙏