30.09.2021 நேரம் காலை 11:15 மணி தற்சமயம் வட கடலோர மாவட்டங்களை ஒட்டிய வங்கக்கடலில் மத்திய அடுக்கில் கிழக்கு திசை காற்று ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் குறிப்பாக மாலை/இரவு அல்லது நள்ளிரவு நேரங்களில் தரை பகுதியின் மேற்பரப்பில் கிழக்கு திசை காற்று வீசத்தொடங்கும் (Surface level easterlies ) இனி மழை மேகங்களை கிழக்கு திசையில் எதிர்பார்த்து காத்திருங்கள்.
வானிலை அமைப்பு
=================
👉 குஜராத் மாநிலத்தில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது இது தொடர்பாக நேற்றைய காணொளியிலும் விளக்கங்கள் வழங்கியிருந்தேன் அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் தீவிரமடைந்து மேற்கு திசையில் நகர உள்ளது வடக்கு அரபிக்கடல் பகுதியில் #Qulab_cyclone ( #குலாப்புயல் ) மீண்டும் புத்துயிர் பெறலாம் ஆனால் அதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது.
👉வடமேற்கு ஜார்கண்ட் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் வலுக்குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும் அதனாலும் தமிழகத்துக்கு நேரடியான பயன்கள் என்று எதுவும் கிடையாது.
👉தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது இன்று மாலை அது தமிழகத்தை நெருங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொள்ளலாம்.
கிழக்கு திசை காற்றால் தற்காலிகமாக அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு பதிவாக இருக்கக்கூடிய மழையை அனுபவிக்க தயராகுங்கள்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
தமிழகத்தில் கடந்த (30\09/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 90மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 83மிமீ
ஈரோடு (ஈரோடு) 65மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 56மிமீ
ஈரோடு AWS (ஈரோடு) 54மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 51மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 48.8மிமீ
ஈரோடு PRG (ஈரோடு) 48மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 47.2மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 42.4மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 40மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 32மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 27.4மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 27மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்) 26.2மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்) 25.4மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), சோழவந்தான் (மதுரை) 22மிமீ
ஒரத்தநாடு ARG (தஞ்சாவூர்) 21மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 20மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 19மிமீ
வல்லம் (தஞ்சாவூர்) 18மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வாடிப்பட்டி (மதுரை) 16மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 12.8மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 12மிமீ
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 11.8மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 11.6மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 11மிமீ
வேலூர் (வேலூர்) 10.2மிமீ
நாமக்கல் (நாமக்கல்),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 10மிமீ
இளையான்குடி (சிவகங்கை),அன்னவாசல் (புதுக்கோட்டை), புதுச்சத்திரம் (நாமக்கல்), திருவையாறு (தஞ்சாவூர்) 9மிமீ
தஞ்சாவூர் PTO(தஞ்சாவூர்) 8.5மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்),ஆலங்குடி (புதுக்கோட்டை), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 8மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 7.4மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 7.2மிமீ
மானாமதுரை (சிவகங்கை), மதுராந்தகம் (செங்கல்பட்டு),புலிவலம் (திருச்சி) 7மிமீ
உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 6.6மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 6.2மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), பரமத்திவேலூர் (நாமக்கல்) 6மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5.2மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 4.6மிமீ
பவானி (ஈரோடு) 4.4மிமீ
திருபுவனம் (சிவகங்கை), காட்பாடி (வேலூர்) 4.2மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கொடிவேரி அணை (ஈரோடு), மதுரை AWS (மதுரை) 4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 3.6மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 3.5மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 3.4மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 3.3மிமீ
பெரியகுளம் (தேனி),தள்ளாகுளம் (மதுரை) 3மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 2.4மிமீ
கரூர் (கரூர்) 2.2மிமீ
மோகனூர் (நாமக்கல்), செய்யாறு (திருவண்ணாமலை),கொப்பம்பட்டி (திருச்சி), மீனம்பாக்கம் (சென்னை) 2மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பூதலூர் (தஞ்சாவூர்) 1.8மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 1.5மிமீ
மஞ்சளாறு அணை (தேனி) 1.4மிமீ
தேக்கடி (தேனி) 1.2மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை), வாலாஜா (இராணிபேட்டை), செய்யூர் (செங்கல்பட்டு), வானூர் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com
பிற்பகல் நேர குரல் பதிவில் மீண்டும் சந்திக்கலாம்.