29.07.2021 நேரம் காலை 11:00 மணி வங்கதேசத்தின் தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க தென்கிழக்கு பகுதிகளில் தற்சமயம் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ( #Well_marked_low_pressure_area ) நிலைக்கொண்டு உள்ளது.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #கொல்கத்தா ( #Kolkatta ) மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கனமழை உண்டு தற்சமயம் #Jessore , #lohagara இடையே #Khulna வடக்கே அந்த சுழற்சியின் மையப்பகுதி நிலைக்கொண்டு இருக்கிறது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் அந்த சுழற்சி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து #Santipur மற்றும் #Bardhaman பகுதிகளை அடைய இருக்கிறது அதன்பிறகு அது #Dhanbad அல்லது #Jamshedpur நகரங்களை நோக்கி நகர முற்படும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம் காற்றின் திசையில் ஏற்படும் மாறுதல்கள் பொறுத்து உட் பகுதிகளின் சில இடங்களில் வெப்பசலன மழையும் பதிவாகும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 23மிமீ
பெரியார் (தேனி) 21.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 20.7மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 17.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி),தேவாலா (நீலகிரி) 17மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 15மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 14மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்),மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 12மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 11மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 10.2மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி) 9மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 7.6மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 7.3மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 7.2மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்), சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 7மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 6.6மிமீ
விரபாண்டி (தேனி) 6.2மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி),பார்வுட் (நீலகிரி) 6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 5.2மிமீ
உத்தமபாளையம் (தேனி) 5.1மிமீ
செருமுல்லி (நீலகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 5மிமீ
ஆயக்குடி (தென்காசி),கிளன்மோர்கன் (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகர்), உதகமண்டலம் (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 4மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 3.3மிமீ
தேக்கடி (தேனி) 3மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.8மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 2.2மிமீ
சேரங்கோடு (நீலகிரி),மசினக்குடி (நீலகிரி) 2மிமீ
கூடலூர் (தேனி) 1.2மிமீ
சிவகிரி (தென்காசி), அப்பர் பவானி (நீலகிரி), அரண்மனைபுதூர் (தேனி), குன்னூர் (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), கல்லட்டி (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com