அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கும் ?
=========================
10.07.2021 நேரம் காலை 10:50 மணி தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகளில் கனமழை பதிவாகும் #கேரளா , #கர்நாடகா , #மஹாரஸ்டிரா , #கோவா மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பல்வேறு இடங்களிலும் கனமழை பதிவாகும் #மும்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடுத்து வரக்கூடிய   வாரத்தில் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் அடுத்த பிறக்க இருக்கும் வாரத்தில் கனமழை பதிவாகும் #மேட்டூர்_அணை க்கான நீர்வரத்து அடுத்து வரக்கூடிய வார நாட்களில் வெகுவெகு என உயரும்.
தென்மேற்கு காற்றின் வீரியம் அதிகரித்து இருப்பதால் இனி வரக்கூடிய நாட்களில் தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழை குறையும் மீண்டும் பருவக்காற்றின் வீரியம் குறைகையில் அதாவது 17.07.2021 அல்லது 18.07.2021 ஆம் தேதி முதல் உள் மாவடங்களில் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகும்.
அடுத்த #Break_monsoon அதாவது அடுத்த சுற்று பருவமழை இடைவெளி காலகட்டம் என்பது அதாவது நிகழும் மாத இறுதி 10 நாட்கள் மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்க நாட்கள் #நாகப்பட்டினம் , #புதுச்சேரி , #சென்னை , #மயிலாடுதுறை , #காரைக்கால்  , #கடலூர் , #செங்கல்பட்டு , #திருவள்ளூர் , #திருவாரூர்  , #தஞ்சாவூர் , #அரியலூர் உட்பட வட கடலோர மாவட்ட வெப்பசலன மழைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் எதனால் தமிழக உட் மற்றும் வட கடலோ மாவட்டங்கள் அதிக பலனை அடைவது கிடையாது என்பதனை அறிய - https://youtu.be/c_m71r4frcQ
அடுத்து வரக்கூடிய வாரத்தில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களிலும் வரண்ட வானிலையே நிலவும் ஆங்காங்கே திடீரென வானம் இருட்டிக்கொண்டு காற்றின் வேகம் அதிகரித்து சில சாரல் , தூரல் அல்லது மிதமான மழை பதிவாகி பின்னர் அதற்கு அடுத்த சில நிமிடங்களிலயே இயல்பு நிலை திரும்பும்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் அதிக பலணடைய வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================
நீலகிரி மாவட்டம் : 
###############
#எருமாடு ,#நெல்லியளம் , #அப்பர்பவாணி  ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.
கோவை மாவட்டம் : 
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு  , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.
தேனி மாவட்டம் : 
##############
 #பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.
கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.
நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம்:
==================
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் , #மாஞ்சோலை #களாக்காடு மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.
காற்றின் வேக மாறுபாடுகள்
=========================
தற்சமயமே காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது 11.07.2021 ஆகிய நாளை முதல் #தாராபுரம் , #அரவாகுறிச்சி  , #மூலனூர் உட்பட பாலக்காடு கணவாய் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 முதல் 75 கி.மீ கள் வேகத்தில் காற்று வீசலாம் #பொள்ளாச்சி , #திருப்பூர் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 50 முதல் 60 கி.மீ கள் வேகத்திலும் #திருச்சி , #தஞ்சாவூர் உட்பட உட் பகுதிகளில் அதிகபட்சமாக 40 முதல் 50 கி.மீ கள் வேகத்திலும் காற்று வீசும் வட கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 35 முதல் 45 கி.மீ கள் வேகத்தில் காற்று வீசும். #ராமேஸ்வரம் , #பாம்பன் , #மண்டபம் , #கன்னியாகுமரி சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
களியேல் (கன்னியாகுமரி) 110மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 104மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 93.9மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 91மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 90.6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 86.6மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 86மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 84.2மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 80மிமீ
வால்பாறை PT0 (கோயம்புத்தூர்) 77.2மிமீ
காட்பாடி (வேலூர்) 76.8மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி) 75.4மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 74.2மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 74மிமீ
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 73.4மிமீ
அடையாமடை (கன்னியாகுமரி) 73மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 72.6மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 70மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 69.8மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 69மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 68.6மிமீ
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 68மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 65.4மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 65.2மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 62.1மிமீ
குருத்தான்கோடு (கன்னியாகுமரி),சின்கோனா (கோயம்புத்தூர்) 60மிமீ
நிலப்பாறை (கன்னியாகுமரி) 58.6மிமீ
வேலூர் (வேலூர்) 55.2மிமீ
பெரியார் (தேனி) 53.2மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 49.5மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 48மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 47.2மிமீ
கலவை PWD (இராணிப்பேட்டை) 46.2மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 46.1மிமீ
முல்லங்கினாவினை (கன்னியாகுமரி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு) 46மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 45மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 43மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 42.5மிமீ
கோழிபோர்விளை (கன்னியாகுமரி) 42மிமீ
தேக்கடி (தேனி),திருவாலங்காடு (திருவள்ளூர்) 40மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 39மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 38.4மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 37மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 36.2மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 35.4மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்),கொத்தவச்சேரி (கடலூர்) 35மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 33.2மிமீ
பெருங்களூர் (புதுக்கோட்டை) 33மிமீ
ஆரணி (திருவண்ணாமலை), வாலாஜா (இராணிபேட்டை) 31மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 28மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 27.2மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 25மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 24மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 23மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 22மிமீ
புவனகிரி (கடலூர்) 21மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 20.6மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 20.4மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 20.2மிமீ
ராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), திருத்தணி (திருவள்ளூர்) 20மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 19.4மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 18.8மிமீ
கூடலூர் (தேனி) 18.3மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு),ஜீ பஜார் (நீலகிரி) 18மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 17.2மிமீ
அவலாஞ்சி (நீலகிரி),காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), அப்பர் பவானி (நீலகிரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை),அப்பர் கூடலூர் (நீலகிரி) 17மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 16.8மிமீ
ஆயக்குடி (தென்காசி) 16மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை),குருங்குளம் (தஞ்சாவூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),கிள்நிலை (புதுக்கோட்டை) 14மிமீ
பொன்னை அணை (வேலூர்) 13.8மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 13.2மிமீ
சிவகிரி (தென்காசி) 13மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 12.6மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 12.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 12மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை) 11.2மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 10.4மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 10.2மிமீ
செருமுல்லி (நீலகிரி),திருச்சுழி (விருதுநகர்),தேவாலா (நீலகிரி) 10மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 9.4மிமீ
மரக்காணம் (விழுப்புரம்),பார்வுட் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு) 8மிமீ
குடிதாங்கி (கடலூர்) 7.5மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி), சோழிங்கநல்லூர் (சென்னை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 7மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), மனல்மேடு (மயிலாடுதுறை),கட்டுமாவடி (புதுக்கோட்டை),வரட்டுபள்ளம் (ஈரோடு)6.2மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 5.7மிமீ
வானமாதேவி (கடலூர்) 5.6மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 5.2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 4.6மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 4.4மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 4.2மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்),வடகுத்து (கடலூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 3.8மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), திருப்போரூர் (செங்கல்பட்டு), உதகமண்டலம் (நீலகிரி) 3.4மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 3.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 3மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 2.4மிமீ
சிவகங்கை (சிவகங்கை), கீழ் கோத்தகிரி (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வீரபாண்டி (தேனி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 2மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு),குன்னூர் (நீலகிரி) 1.5மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 1.4மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), செஞ்சி (விழுப்புரம்), போடிநாயக்கனூர் (தேனி), பரமக்குடி (இராமநாதபுரம்) 1மிமீ
  
