09.06.2021 நேரம் காலை 9:50 மணி நாம் கடந்த வாரம் எதிர்பார்த்து இருந்தது போல 11.06.2021 ஆகிய நாளை மறுநாள் வாக்கில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (#Monsoon_low_pressure_area )உருவாகும் இதைப்போன்ற காலகட்டடத்தில் அதாவது தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வடக்கு நோக்கி முன்னேறி வரும் ஜூன் மாத காலகட்டத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவாகும் சுழற்சிகள் பெரும்பாலும் வடமேற்கு அல்லது வட-வட மேற்கு திசையிலயே நகரும் இதுவும் அதே பாதையை தான் தேர்ந்தெடுக்கும் ஆகையால் அது ஒடிசா அல்லது மேற்கு வங்க கடலோர பகுதிகளின் வழியே கரையை கடந்து நிலப்பகுதிகளுக்குள் வடமேற்கு அல்லது வட - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும் இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் அதிகரிக்கும் #ஓடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மீதம் இருக்கும் பகுதிகள் #பீகார் மற்றும் #உத்திரபிரதேச மாநிலத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்க வழிவகை செய்யும்.
இந்தியாவின் அரபிக்கடலை ஒட்டியிருக்கும் மேற்கு மாநிலங்களின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே ஜூன் 11 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய வார நாட்களில் கனமழை / மிக கனமழை சில இடங்களில் அதிகனமழை பதிவாகும்.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறும் நமது #சேலம் மாவட்ட #மேட்டூர் மற்றும் #பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் உட்பட தமிழகத்தின் அணைகளின் நீர்மட்டமும் உயரும் நீர் வழிப்பாதைகளில் வெள்ளப்பெருக்கும் ஜூன் 13 ஆம் தேதிகளுக்கு பிறகு ஏற்படலாம்.
#நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் கனமழை பதிவாகும்.
தென்மேற்கு பருவமழை வீரியம் அடைந்து இருக்கையில் தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை குறைந்து இருக்கும் தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் குறைந்த பிறகு அதாவது ஜூன் 16 அல்லது 17 ஆம் தேதிகளில் வாக்கில் மீண்டும் மேற்கு , உள் மாவட்டங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழையை எதிர்பார்க்கலாம்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலகட்டத்தில் அதிக பலணடைய வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
===========================
நீலகிரி மாவட்டம் :
###############
#எருமாடு ,#நெல்லியளம் , #அப்பர்பவாணி ,#நடுவட்டம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்.
கோவை மாவட்டம் :
#################
#வால்பாறை , #சின்னக்கல்லாறு , #சின்கோனா , #சோலையாறு_அணை , #பெரம்பிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகள்.
தேனி மாவட்டம் :
##############
#பெரியார்_அணை ,#தேக்கடி மற்றும் இதர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்.
கன்னியாகுமரி மாவட்டம்:
#####################
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் , #சிவலோகம் ,#சித்தாறு_அணை ,#புத்தன்_அணை மற்றும் இதர #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு பகுதிகள்.
நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம்:
==================
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் , #மாஞ்சோலை #களாக்காடு மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள்.
அடுத்து வரக்கூடிய நாட்களிலும் ஒவ்வொரு நாளும் அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை குரல் பதிவாகவோ அல்லது எழுத்துப்பூர்வமான பதிவாகவோ தொடர்ந்து நமது பக்கத்தில் பதிவு செய்கிறேன்.
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com