10.06.2021 நேரம் மாலை 4:30 மணி முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்தது போல அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது 11.06.2021 (11 ஜூன் 2021 )ஆகிய நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது அதன்பின்னர் அது வட மேற்கு திசையில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பயணித்து 13.06.2021 ஆம் தேதி வாக்கில் ஓடிசாவின் வடக்கு பகுதிகளில் அதிலும் குறிப்பாக #balasore பகுதியை ஒட்டிய கடல் பகுதிகளில் கரையை கடந்து அதன் பின்னர் நிலப்பகுதிகளுக்குள் அதற்கும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வடமேற்கு அல்லது வட - வட மேற்கு திசையில் பயணிக்க உள்ளது இதன் தாக்கத்தால் #பீகார் மற்றும் #உத்திரபிரதேச மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஜூன் 11 ஆம் தேதிக்கு பிறகு அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளது இதெல்லாம் ஒருபுறம் இருக்க அந்த சுழற்சி வலுவிழந்த பின் இந்த மாத 3 வது வார இறுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக இருக்கிறது அதுவும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் இதே பாதையை தேர்ந்தெடுக்கும் ஆகையால் முக்கிய தமிழக அணைகளின் நீர்மட்டம் வெகு வெகுவென அடுத்து வரக்கூடிய நாட்களில் உயரும்.இது தொடர்பான தகவல்களை கடந்த குரல் பதிவிலும் உங்களுடன் விரிவாக பகிர்ந்து கொண்டு இருந்தேன் - https://youtu.be/NBbljcQK6Hs
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 21மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 20மிமீ
அவிநாசி (திருப்பூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 13மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு) 9மிமீ
சேலம் (சேலம்) 8.8மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 8மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 6.1மிமீ
தேவாலா (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி) 4மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 3.6மிமீ
தேக்கடி (தேனி) 2.6மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு),ஜீ பஜார் (நீலகிரி) 2மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.2மிமீ
எண்ணூர் AWS (சென்னை),பார்வுட் (நீலகிரி), மீனம்பாக்கம் (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com