இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 ஜூன், 2021

11.06.2021 low pressure area formed over northwest Bay of Bengal | Active SWM | heavy rain mumbai | காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது | வானிலை அறிக்கை | வீரியம் பெரும் தென்மேற்கு பருவமழை

0
11.06.2021 நேரம் காலை 10:45 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி ( #Low_pressure_area) உருவானது  இதனுடைய தாக்கத்தால் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கியது ஆகையால் இன்று முதல் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு #மஹராஷ்டிர மாநில கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பதிவாக உள்ளது.

12.06.2021 ஆகிய நாளை முதல் அதற்கு அடுத்த 4 நாட்களுக்கு #கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் உட்பட கர்நாடகம் மற்றும் #கோவா மாநில கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் கனமழை பதிவாகும் சில பகுதிகளில் அதி கனமழையும் கோவா மற்றும் கரநாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர பகுதிகளில் பதிவாகும்.

நம்முடைய தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் 12.06.2021 ஆகிய நாளை முதல் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் அதற்கு அடுத்த 3 நாட்களில் கனமழை பதிவாகும்.

அடுத்து வரக்கூடிய நாட்களில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

============

11.06.2021 Time morning 10:45 AM current weather scenario
--------------------------

👉As we expected earlier, a low pressure area formed over northwest bay of Bengal and adjoining Odisha and Gangetic West Bengal coasts.it is likely to become more marked and move west - northwestwards across odisha coast during next 24 hours.

👉Strengthening of Westerly winds in West coast of India in association with west-northwestward movement of that low pressure area. Due to this heavy to very heavy rainfall likely to continue over coastal districts of Maharashtra including #mumbai and its suburbs.

👉From 12.06.2021 onwards heavy to very heavy rainfall and isolated extremely heavy falls over Karnataka and goa coasts and its ghats (including cauvery catchment areas)

👉heavy to very heavy rainfall over kerala and western ghats of tamilnadu during 12.06.2021 - 15.06.2021

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 40மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 24மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 7மிமீ

தேவாலா (நீலகிரி) 6மிமீ

காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 5மிமீ

வாலாஜா  (இராணிபேட்டை) 4.1மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 4மிமீ

காட்பாடி (வேலூர்) 3.8மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 3.2மிமீ

செருமுல்லி (நீலகிரி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்), பண்ருட்டி (கடலூர்),பாடந்துறை (நீலகிரி) 3மிமீ

நடுவட்டம்(நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி) 2மிமீ

ஏற்காடு (நீலகிரி),கொத்தவச்சேரி (கடலூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக