15.06.2021 நேரம் பிற்பகல் 12:10 மணி
======================
வானிலை அமைப்பு
==============
👉வடக்கு ஜார்காண்ட் மாநிலம் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு உத்திரபிரதேச மாநில பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது
👉வடக்கு ஹரியானா மாநில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் அதிகரித்து இருப்பதால் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பதிவாகும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதிகளில் சில இடங்களில் கணமழையும் பதிவாகலாம் இவைத்தவிர்த்து சேலம் மாவட்ட பகுதிகள் டெல்டா மாவட்ட தெற்கு பகுதிகள் உட்பட தமிழக உட் பகுதிகளிலும் அங்கும் இங்குமாக திடிரென்று வானம் இருட்டிக்கொண்டு சில நிமிட மழை சாரல் தூரல் பதிவாகியது என்றால் மகிழ்ச்சி கொள்ளுங்கள். இதுவரையில் நாம் எதிர்பார்த்து இருந்த அளவு மழை இந்த சுற்றில் கேரள மாநிலம் மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பதிவாகவில்லை என்று தான் கூற வேண்டும் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வந்தாலும் இது போதுமானது அல்ல இதற்கும் சேர்த்து அடுத்த சுற்றில் தெரிக்கவிடும் என நம்பலாம்.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் #Erattayar மற்றும் #pathanamthitta மாவட்டம் #Muzhiyar தவிர்த்து வேறு எந்த அணைகளுக்கும் எச்சரிக்கை கிடையாது இன்று கடந்த 24 மணி நேரத்தை விட அதிகமான இடங்களில் மழை பதிவாகலாம்.
தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் குறைந்த பிறகு 20.06.2021 தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.
இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறைக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
அப்பர் பவானி (நீலகிரி) 109மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 83மிமீ
அப்பர் நிரார் (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 59மிமீ
தேவாலா (நீலகிரி) 57மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 51மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 37மிமீ
லோயர் நிரார்(கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 36மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 35மிமீ
பெரியார் (தேனி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 25மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி) 24மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 22மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 21மிமீ
குண்டாறு (தென்காசி) 19மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 18.5மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 16மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 15மிமீ
பார்வுட் (நீலகிரி) 14மிமீ
உதகமண்டலம் aws (நீலகிரி) 13.4மிமீ
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 12மிமீ
மசினக்குடி (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி), அடவிநயினார் அணை (தென்காசி) 11மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),தென்பறநாடு (திருச்சி),கடனா நதி (தென்காசி) 10மிமீ
தேக்கடி (தேனி) 9.8மிமீ
கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 8மிமீ
கூடலூர் (நீலகிரி) 7.6மிமீ
செங்கோட்டை (தென்காசி) 7மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 6மிமீ
உத்தமபாளையம் (தேனி) 5.2மிமீ
கிண்ணகோரை (நீலகிரி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), குன்னூர் (நீலகிரி ), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி) 5மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி) கருப்பா நதி (தென்காசி) 4மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 3.2மிமீ
கல்லட்டி (நீலகிரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU(கோயம்புத்தூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கோவை தெற்கு (கோயம்புத்தூர்), சிவலோகம் (கன்னியாகுமரி) 3மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 2.6மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 2.4மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்),குழித்துறை (கன்னியாகுமரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 2மிமீ
மயிலாப்பூர் (சென்னை), ஓசூர்(கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை) 1.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 1.4மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), குடியாத்தம் (வேலூர்) 1.2மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),தாளாவாடி (ஈரோடு), ஆலத்தூர் (சென்னை),மாம்பலம் (சென்னை), தக்கலை (கன்னியாகுமரி), வந்தவாசி (திருவண்ணாமலை) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com