இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூன், 2021

01.06.2021 Today's weather analysis | rainfall data | இன்றைய வானிலை அறிக்கை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

0

01.06.2021 நேரம் காலை 11:20 மணி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி அதனுடைய தடத்தை கீழடுக்கிலும் பதித்தது இதன் காரணமாக கீழடுக்கிலும் காற்றின் திசையில் வட மற்றும் உள் தமிழகத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன அடுத்த 24 மணி நேரத்தில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கும் நாளை மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #புதுச்சேரி , #கடலூர் மாவட்ட பகுதிகள் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் மழை பதிவாக தொடங்கலாம்.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #திருவள்ளூர் , #காஞ்சிபுரம் மற்றும் #செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் #திருப்பத்தூர் , #கிருஷ்ணகிரி , #வேலூர் , #ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளிலும் #ஜவ்வாதுமலை யை ஒட்டிய #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகும் #சேலம் , #தர்மபுரி , #நாமக்கல் மற்றும் #விழுப்புரம் மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் #திருச்சி மாவட்ட வடக்கு பகுதிகளில் மழை பதிவானால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன் #நீலகிரி மற்றும் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகும்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 50மிமீ

அரூர் (தர்மபுரி) 44மிமீ

கள்ளிக்குடி (மதுரை) 21.4மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 18.1மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 18மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) 17மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 15.5மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 15மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்), உதகமண்டலம் aws (நீலகிரி),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 13மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 12மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 11.6மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 11.5மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 9.2மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 9.1மிமீ

தள்ளாகுளம் (மதுரை) 8மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 7.2மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 6மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 5மிமீ

பெரியார் (தேனி) 4.4மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 4.2மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 3.8மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி), அப்பர் பவானி (நீலகிரி) 3மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ

தேக்கடி (தேனி) 2.2மிமீ

கிளன்மோர்கன்(நீலகிரி),ஆலங்காயம் (திருப்பத்தூர்),தேவாலா (நீலகிரி), ஏலகிரிமலை ARG (திருப்பத்தூர்), கோத்தகிரி (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி),கெத்தி (நீலகிரி)  2மிமீ

செங்கம் (திருவண்ணாமலை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1.8மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி),குன்னூர் (நீலகிரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்



#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com



Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக