இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூன், 2021

03.06.2021 Today's weather report | last 24 hours complete rainfall data | இன்றைய வானிலை அறிக்கை | மழை அளவுகள் பட்டியல்

0
03.06.2021 நேரம் காலை 11:40 மணி

வானிலை அமைப்பு
=================

 👉பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் முதல் குமரிக்கடல் வரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

👉கர்நாடக மாநில வடக்கு பகுதிகளை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

👉நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் இவ்விரண்டு காரணிகளின் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் தரை (surface level) அளவில் (கீழ் அடுக்கில்) அகடு (Trough) நிலவி வருகிறது ஆகையால் மேற்கு திசை காற்றின் வீரியமும் அதிகரிக்க தொடங்குகிறது.

தமிழகத்தில் இன்று வானிலை எப்படி இருக்கலாம்?
=====================
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் மேலும் பரவலாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் கடந்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகியுள்ளது நாம் எதிர்பார்த்து இருந்தது போல #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது திருச்சி மாநகரின் புறநகர் பகுதியான #நாவலூர்_குட்டப்பட்டு பகுதிகளில் கிட்டத்தட்ட 117 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்து இருக்கிறது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #திருச்சி , #சேலம் , #ஈரோடு , #நாமக்கல் , #கரூர் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை உண்டு.

#சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில்  வெப்பசலன மழை பதிவாகலாம் #புதுச்சேரி மாவட்டத்தின் மேற்கி7 பகுதிகளின் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகலாம் இவைமட்டும் அல்லாது #மதுரை , #திண்டுக்கல் , #பெரம்பலூர்  , #புதுக்கோட்டை  , #காஞ்சிபுரம் , #திருவள்ளூர்  , #வேலூர் , #தர்மபுரி , #கிருஷ்ணகிரி , #திருப்பத்தூர் , #திருவண்ணாமலை , #கள்ளக்குறிச்சி , #செங்கல்பட்டு , #விழுப்புரம் , #கடலூர் , #அறியலூர் , #ராமநாதபுரம் , #சிவகங்கை மாவட்ட பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #தஞ்சை , #திருவாரூர் , #நாகப்பட்டினம் , #மயிலாடுதுறை , #காரைக்கால் உட்பட டெல்டா மாவட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகலாம்.

விரிவான வானிலை அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
======================
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 116.8மிமீ

பாடலூர் (பெரம்பலூர்) 73மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 55.3மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 53மிமீ

கங்கவள்ளி (சேலம்) 52மிமீ

புதுச்சத்திரம் (நாமக்கல்) 51மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 49மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 48.2மிமீ

ஆத்தூர் (சேலம்) 47.3மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 47மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 45மிமீ

சங்கரிதுர்க் (சேலம்) 43.2மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 40.3மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்) 37மிமீ

தட்டயங்பேட்டை (திருச்சி), குமாரபாளையம் (நாமக்கல்) 36மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 34.5மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 34மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 32மிமீ

மணப்பாறை (திருச்சி) 31மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),புலிவலம் (திருச்சி) 30மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 27.8மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 27.7மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 25மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு),நடுவட்டம் (நீலகிரி), பவானி(ஈரோடு) 23மிமீ

அம்மாபேட்டை (ஈரோடு) 21.4மிமீ

தளுத்தலை (பெரம்பலூர்) 21மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 19.4மிமீ

ஏற்காடு (சேலம்) 19.2மிமீ

எரையூர்(பெரம்பலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு) 19மிமீ

சேலம் (சேலம்) 17.7மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 17.2மிமீ

தென்பறநாடு (திருச்சி), கல்லட்டி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 17மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 16.5மிமீ

உதகமண்டலம் aws (நீலகிரி) 15.8மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்),பெரம்பலூர் (பெரம்பலூர்), ஈரோடு (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 15மிமீ

கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 14மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 13.2மிமீ

எருமைபட்டி (நாமக்கல்),ஆனைமடுவு அணை (சேலம்), விராலிமலை (புதுக்கோட்டை),மங்கலாபுரம் (நாமக்கல்) 10மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),வி.களத்தூர் (பெரம்பலூர்),சிறுக்குடி (திருச்சி) 9மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி), போடிநாயக்கனூர் (தேனி) 8.3மிமீ

தர்மபுரி PTO (தர்மபுரி) 8மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு) 7.4மிமீ

விரகனூர் (சேலம்) 7மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 6.6மிமீ

ஓமலூர் (சேலம்), கரூர் பரமத்தி(கரூர்), பல்லடம் (திருப்பூர்) 6மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 5மிமீ

எடப்பாடி (சேலம்) 4.6மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),தேவாலா (நீலகிரி), மேல் ஆலத்தூர் (வேலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்),கெத்தி (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), திருச்செங்கோடு (நாமக்கல்), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ

புலிபட்டி (மதுரை) 3.2மிமீ

திருச்சி TOWN (திருச்சி), பென்னாகரம் (தர்மபுரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), சென்னிமலை (ஈரோடு) 3மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 2‌.8மிமீ

மோகனூர் (நாமக்கல்) 2.5மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 2.4மிமீ

அரண்மனைப்புதூர் (தேனி) 2.2மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி),வாழப்பாடி (சேலம்),ஜீ பஜார்(நீலகிரி), மேலூர் (மதுரை), தர்மபுரி (தர்மபுரி), முசிறி (திருச்சி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 2மிமீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), கூடலூர் (தேனி) 1.5மிமீ

காரைக்குடி (சிவகங்கை) 1.2மிமீ

திருப்பூர் தெற்கு (திருப்பூர்),தனியாமங்கலம் (மதுரை),பையூர் ARG (தர்மபுரி), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக