இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 மே, 2021

Tauktae cyclone likely to form around 6th may 2021 in Arabian sea | மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாக இருக்கும் "தாக்டே " புயல்

0

12.05.2021 நேரம் 5:10 மணி நாம் முன்பு எதிர்பார்த்து இருந்தது போல அடுத்த 36 மணி நேரத்தில் அதாவது 14.05.2021 ஆகிய நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் கடல் பகுதிகளில் #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_பகுதி உருவாக இருக்கிறது அதன் பின்னர் அது மேலும் தீவிரமடைந்து அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது 15.05.2021 ஆம் தேதி ஆண்டு ஒரு #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் என்கிற நிலையை அடையும் அதன் பின்னர் அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதாவது 16.05.2021 ஆம் தேதி வாக்கில் அது மேலும் வலுப்பெற்று ஒரு புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு " #தக்டே " ( #tauktae ) என்கிற பெயர் சூட்டப்படும்.

குறைந்தது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை யாவது அந்த சுழற்சி அடையட்டும் அதன் பிறகு அதனுடைய நகர்வுகளை ஆராயலாம்.

என்னைப் பொறுத்தவரையில் தற்போது மாதிரிகள் காட்டும் திசையை அது தேர்ந்தெடுத்து இந்தியாவின் கடலோர பகுதிகளை அடையுமா என்பது சந்தேகமே...எதுவாயினும் அதன் நகர்வுகளை அடுத்த சில நாட்களில் நாம் மிக தெளிவாக பின் தொடரலாம்.

தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை மென்மேலும் அதிகரிக்கும்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பதிவாகும்.மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள மாநிலத்தில் கனமழை ஆங்காங்கே பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
====================
ஆழ் கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புங்கள் மறு அறிவிப்பு வரும் வரைக்கு கடலுக்கு செல்வதை தவிர்ப்பது மிகவும நல்லது.

=======================
12.05.2021 time 5:10 pm As we expected before a low-pressure area ( LPA) is very likely to form over the southeast Arabian Sea and adjoining Lakshadweep area in the next 36 hours around 14.05.2021 (May 14) morning. after that, it may intensify as a Depression in the next 24 hours around 15.05.2021 (May 15) further it may intensify into a Cyclone over the east-central Arabian sea around 16.05.2021 (May 16 ).once it reached the intensity of the cyclone it named as Burmese word  " Tauktae " which means "highly vocal lizard gecko "

Regarding its landfall blindly don't believe the weather models now wait for 2 days we will discuss this after its intensification. according to me, mostly it won't enter the west coast of India lets wait and see.

Convective rain will be reduced in interior and coastal Tamilnadu, especially hot days are awaiting for the coastal regions of Tamilnadu. we may expect heavy to very heavy rainfall at isolated places over western ghats of Tamilnadu and Kerala on the 14th and 15th of May.

Fishermen out in the deep sea are advised to return to the coast by 14.05.2021 and not to venture into the eastern Arabian sea until 19.05.2021.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக