13.05.2021 நேரம் பிற்பகல் 2:15 மணி நீண்ட நேரமாக #திருவாரூர் , #தூத்துக்குடி , #ராமநாதபுரம் , #விருதுநகர் , #சேலம் மாவட்ட பகுதிகளில் அங்கும் இங்குமாக நீண்ட நேரமாக மழை மேகங்கள் பதிவாகி வருகிறது இது தொடர்பாக கடந்த குரல் பதிவில் நிகழ்நேர தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு இருந்தேன் இப்பொழுதும் #திருவாரூர் - #திருத்துறைப்பூண்டி இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் மேலும் #ராமநாதபுரம் மாவட்டம் #உடைக்குளம் , #அபிராமம் , #முதுகுளத்தூர் , #சாயல்குடி , #சத்திரக்குடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #தூத்துக்குடி மாவட்டம் #ஏரல் , #திருச்செந்தூர் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திருச்செந்தூர் - #ஸ்ரீவைகுண்டம் இடைப்பட்ட அநேக இடங்களிலும் #தூத்துக்குடி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவைத்தவிர்த்து #விருதுநகர் மாவட்டம் #விருதுநகர் , #சிவகாசி , #கிருஷ்ணன்கோயில் , #வாட்ராப் , #ஸ்ரீவில்லிபுத்தூர் - #கல்லுபட்டி இடைப்பட்ட அநேக இடங்கள் #ஏழுமலை , #தேனி மாவட்டம் #ஆண்டிபட்டி என பல்வேறு இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #சேலம் மாவட்டம் #ஏற்காடு - #கோம்பூர் இடைப்பட்ட இடங்களிலும் #தும்பல் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #நாமக்கல் மாவட்டம் #ராசிபுரம் மற்றும் #ஈரோடு மாவட்டம் #குன்றி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #தேனி - #கூக்கள் இடைப்பட்ட பகுதிகளின் அநேக இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
நிகழ்நேர தகவல்களை நாம் அடுத்த குரல் பதிவின் வாயிலாகவும் விரிவாக விவாதிக்கலாம்.
தற்பொழுது நாம் எதிர்பார்த்து இருந்தது போல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரமடையும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #மதுரை , #விருதுநகர் உட்பட தென் உள் மாவட்டங்களிலும் மேற்கு உள் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பாக சில விஷயங்களை கடந்த குரல் பதிவில் நான் பதிவு செய்திருக்கிறேன் - https://youtu.be/YDKTCA2WrEU
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===========================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 87மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 49.4மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 38மிமீ
உத்தமபாளையம் (தேனி) 29.4மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி) 28மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 27மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 26மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்) 24மிமீ
இளையான்குடி (சிவகங்கை) 22மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 21.7மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 18.2மிமீ
ஏற்காடு (சேலம்) 16.2மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி) 12.6மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 11மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10.4மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 10.2மிமீ
தளி (கிருஷ்ணகிரி), ஓமலூர் (சேலம்) 10மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 8மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 7.8மிமீ
ஏலகிரிமலை_arg (திருப்பத்தூர்) 6.5மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்),தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),சின்கோனா (கோயம்புத்தூர்) 4மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி),சுருளக்கோடு (கன்னியாகுமரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 3மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 2மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 1.1மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com