30.04.2021 நேரம் பிற்பகல் 1:00 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் #கோயம்புத்தூர் மாநகரின் புறநகர் பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் #ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளிலும் மழை உண்டு #தேனி மற்றும் #விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகும் விரிவான வானிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல அதிகபட்சமாக #கன்னியாகுமரி மாவட்டம் #பேச்சிப்பாரை பகுதிகளில் 63 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 63.2மிமீ
பேச்சிப்பாறை Arg (கன்னியாகுமரி) 51.5மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 43.6மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 37மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 35.4மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 34.8மிமீ
மசினங்குடி (நீலகிரி) 20மிமீ
உத்தமபாளையம் (தேனி) 19.4மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 19மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 16மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 14மிமீ
கொடநாடு (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி) 12மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 10.6மிமீ
எடப்பாடி (சேலம்),தேவாலா (நீலகிரி) 10மிமீ
கூடலூர் (தேனி) 9.6மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி) 6மிமீ
பாலக்கோடு (தர்மபுரி), கல்லட்டி (நீலகிரி) 5மிமீ
தேக்கடி (தேனி) 4.4மிமீ
சங்கரிதுர்க் (சேலம்),பார்வுட் (நீலகிரி) 4மிமீ
பவானி (ஈரோடு) 3.2மிமீ
முசிறி (திருச்சி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 3மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 2.3மிமீ
ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),குழித்துறை (கன்னியாகுமரி),அவலாஞ்சி (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி),செருமுல்லி (நீலகிரி) 2மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 1.5மிமீ
குன்னூர் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரைசப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com