23.04.2021 நேரம் மாலை 4:15 மணி நாம் கடந்த குரல் பதிவில் மழை வாய்ப்புகளில் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் சில தரமான சிறப்பான சம்பவங்கள் வட மாவட்டங்களில் அரங்கேற தொடங்கியுள்ளது.குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல #வேலூர் , #தர்மபுரி , #ஓசூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும்.
மேலும் தற்பொழுது #பள்ளிக்கொண்டா , #விரிச்சிபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #வேலூர் - #ஆம்பூர் இடைப்பட்ட சாலையின் அநேக இடங்களிலும் #காட்பாடி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவைத்தவிர்த்து #தென்கனிக்கோட்டை , #அரூர் , #மொரப்பூர் , #கீழ்மங்களம் என #கிருஷ்ணகிரி மற்றும் #தர்மபுரி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகிறது மேலும் #நாயினார்மலை , #மேட்டலா , #மறவல்லிக்கோம்பை , #தும்பல் - #ஆத்தூர் இடைப்பட்ட பகுதிகள் என #சேலம் மற்றும் #நாமக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் #திருவள்ளூர் மாவட்ட மேற்கு பகுதிகளின் சில இடங்களிலும் #திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகும்...
இன்று உள் மாவட்டங்களில் தரமான சம்பவங்கள் உண்டு.விரிவான அறிக்கையை காண - https://youtu.be/ww079nx1exc
இன்னும் சற்று நேரத்தில் நிகழ்நேர தகவல்கள் மற்றும் மழை வாய்ப்புகளை குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=============
ஏலகிரி மலை_Arg (திருப்பத்தூர்) 34மிமீ
சென்னிமலை (ஈரோடு) 16மிமீ
தளி(கிருஷ்ணகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 10மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 9மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 6.4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 4மிமீ
செருமுல்லி (நீலகிரி) 3மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 2.4மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),பார்வுட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 2மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.6மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com