22.04.2021 நேரம் பிற்பகல் 1:30 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் அதேபோல #பெங்களூரு , #மைசூரு சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தெற்கு கர்நாடக மாநில பகுதிகளில் ஆங்காங்கே மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் இவைத்தவிர்த்து இன்று வட தமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளிலும் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #சித்தூர் மாவட்ட பகுதிகளிலும் #திருப்பதி சுற்றுவட்டப் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகக்கூடும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் #குடியூர் , #ஆசனூர் மலை பகுதிகள் உட்பட #ஈரோடு மாவட்ட வடக்கு மலை பகுதிகளிலும் #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகள் உட்பட #நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் #கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் #நெல்லை , #தென்காசி மற்றும் #விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #சேலம் , #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #திருப்பத்தூர் மற்றும் #நாமக்கல் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பசலன மழை பதிவாகலாம்.
மேலும் நான் கடந்த காணொளியில் குறிப்பிட்டு இருந்ததை போல 23.04.2021 ஆகிய நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தமிழக மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில தரமான சம்பவங்களும் அரங்கேறலாம் மேலும் வட உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் நாளை மழை பதிவாகும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 45மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 34மிமீ
சேரங்கோடு (நீலகிரி) 22மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 16.4மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி) 16மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 13மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 11.8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 11மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 9மிமீ
தாளாவாடி (ஈரோடு), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 7மிமீ
களியேல் (கன்னியாகுமரி) 6மிமீ
திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) 5மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்) 3மிமீ
கழுகுமலை (தூத்துக்குடி), தென்காசி (தென்காசி) 2மிமீ
குண்டாறு அணை (தென்காசி) 1மிமீ
மழை அளவுகளை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com