02.04.2021 நேரம் காலை 11:45 மணி நேற்றும் வட தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரித்தே இருந்தது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இதே சூழல்களே தொடரும் அதுமட்டுமல்லாது நேற்று #திண்டுக்கல் , #மதுரை மாவட்ட பகுதிகள் உட்பட தென் உள் மாவட்டங்களிலும் #ஈரோடு உட்பட மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழையும் பதிவாகியுள்ளது.நாளை முதல் கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை என்பதை போன்ற சூழல் வட தமிழகத்தில் நிலவ தொடங்கினாலும் அடுத்து வரக்கூடிய வாரத்திலும் பகல் நேர வெப்பநிலையானது இயல்பை விட அதிகரித்தே இருக்கும் அதே சமயம் மேற்கு உள் மாவட்டங்களில் அவ்வப்பொழுது சில இடங்களில் வெப்பசலன மழையும் பதிவாகும்.
தற்சமயம் கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மியான்மர் நாட்டின் கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவி வரும் அந்த #தீவுர_காற்றழுத்த_தாழ்வு_பகுதியானது (#well_marked_low_pressure_area) மேலும் தீவிரமடைந்து ஒரு #காற்றழுத்த_தாழ்வு_மண்டலமாக உருவெடுத்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகும் அது மேலும் தீவிரமடைந்து ஒரு #ஆழ்ந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலம் என்கிற நிலையையும் அடையலாம் ஆனால் அது ஒரு புயலாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே.அது மேலும் வட-வட கிழக்கு திசையில் நகர்ந்து மியன்மர் நாட்டின் கடலோர பகுதிகளையே அடைய முற்படும்.இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது நேரடியான மழை வாய்ப்புகளும் கிடையாது.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube பக்கத்தில் தெளிவாக பதிவிடப்படும்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) - 27 மி.மீ
சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம்) - 17 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 16 மி.மீ
தள்ளாகுளம் (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 14 மி.மீ
திண்டுக்கல் (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ
மதுரை (மதுரை மாவட்டம்) - 10 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 9 மி.மீ
அரண்மனைபுதூர் (தேனி மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 4 மி.மீ
ஈரோடு (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) - 3 மி.மீ
கள்ளந்திரி (மதுரை மாவட்டம்) - 2 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை மாவட்டம்) - 1 மி.மீ
நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com