22.03.2021 நேரம் காலை 10:00 மணி அடுத்து வரக்கூடிய நாட்களில் #காஷ்மீர் , #லடாக் உட்பட இந்தியாவின் வடகோடி மாநிலங்களில் மேற்கத்திய கலக்கத்தின் காரணமாக பனிப்பொழிவு மற்றும் மழை தீவிரமடைய உள்ளது.தற்பொழுதே காஷ்மீர் பகுதிகளிழும் வடக்கு #பாகிஸ்தான் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்து தான் உள்ளது இது மேலும் தீவிரமடையும். #இமயமலை அடிவார பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உண்டு #உத்திரகான்ட் மாநிலம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு குறிப்பாக 24.03.2021 ஆம் தேதி வரையில் இதே சுழல்களே வடகோடி இந்தியாவில் நிலவ இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் உட்பட தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு #கன்னியாகுமரி , #தென்காசி மற்றும் #திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பாக இன்றைய பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் விரிவாக விவாதிக்கலாம்.இந்த மாத இறுதியில் #தூத்துக்குடி , #நெல்லை , #கன்னியாகுமரி , #தென்காசி மாவட்ட பகுதிகள் உட்பட தென் கோடி மாவட்டங்களில் சிறப்பான தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 35 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 19 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 18 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) - 15 மி.மீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர் மாவட்டம்) - 12 மி.மீ
வடகுத்து (கடலூர் மாவட்டம்) - 8 மி.மீ
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி மாவட்டம்) - 5 மி.மீ
சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்) - 3 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 3 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர் மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_paul_antony
#puducherry_weatherman
#tamilnaduweather.com