இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 பிப்ரவரி, 2021

24.02.2021 Today's weather report | tamilnadu weather | rainfall data | இன்றைய வானிலை அறிக்கை

0
24.02.2021 நேரம் காலை 11:00 மணி இன்று #சேலம் மாவட்ட மேற்கு பகுதிகளான  #சங்ககிரி , #தேவூர் , #ஈரோடு மற்றும் #நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு சுற்றுவட்டப் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் குறிப்பாக 12:00 மணி முதல் 3:30 மணி வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 96°F பாரன்ஹீட் வெப்பநிலை முதல் 99°F பாரன்ஹீட் அளவிலான வெப்பநிலை இன்று பதிவாகும்.அதே போல தான் #விருதுநகர் , #சாத்தூர் , #சிவகாசி சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்தே இருக்கும். பொதுவாக இந்த காலகட்டத்தில் மேற்கு உள் மற்றும் தென் உள் மாவட்ட பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பது இயல்பு தான் அதுவும் குறிப்பாக #ஈரோடு சுற்றுவட்டப் பகுதிகளில் இவைத்தவிர்த்து #திருப்பூர் , #பவானி , #சென்னிமலை , #பெருந்துறை , #வெள்ளக்கோயில் , #மதுரை ,#கரூர் , #முசிறி , #திருச்சி சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்தே இருக்கும்.

#திசையன்விளை , #தூத்துக்குடி , #விளாத்திக்குளம் , #சாயல்குடி , #கன்னியாகுமரி , #நாகர்கோயில் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 35 மிதல் 45 கி.மீ வேகத்தில் சில நேரங்களில் காற்று வீசலாம் உட் பகுதிகளை பொறுத்தவரையில் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் சமவெளியில் #சேலம் மாவட்டத்தில் குறிப்பாக #சேலம் , #ஆத்தூர் , #ராசிபுரம் இடைபட்ட பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 35 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் இதுவும் இந்த காலகட்டத்தில் இயல்பான ஒன்றுதான்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களிலும் வரண்ட வானிலையே நிலவும் 

கடந்த 24 மணி நேரத்தில் #சின்கோனா சுற்றுவட்டப் பகுதிகளில் 1 மி.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

நேற்று பதிவாகி இருந்த மழை அளவுகளை அதாவது 22.02.2021 ஆகிய நேற்று முன் தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரையிலான மழை அளவுகளை குரல் பதிவாக பதிவு செய்து இருந்தேன்.இப்போது எழுத்துபூர்வமாக பதிவிடுகிறேன்.இது நேற்று முன் தினம் பதிவாகிய மழைதான் குழப்பி கோள்ளாதீர்கள்.

23.02.2021 ஆகிய நேற்று காலை 8:30 மணி வரையிலான அதற்கு முந்தைய 24 மணி நேர மழை அளவுகள்
====================
குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம்) - 57 மி.மீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  34 மி.மீ
பர்லியார் (நீலகிரி மாவட்டம்) -  33 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம்) -  26 மி.மீ
கீழ்கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 22 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  12 மி.மீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர் மாவட்டம்) -  8 மி.மீ
சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்) - 6 மி.மீ
மஞ்சலாறு (தஞ்சாவூர் மாவட்டம்) -  5 மி.மீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர் மாவட்டம்) - 4 மி.மீ  
பவானிசாகர் அணை (ஈரோடு மாவட்டம்) - 4 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்).- 4 மி.மீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 4 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர் மாவட்டம்) - 3 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) -  3 மி.மீ
பிளவுக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) -  2 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை தாலும்கா அலுவலகம் (கோயம்புத்தூர் மாவட்டம்) - 2 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ 
பாடந்துரை பிரையார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ
கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்) - 1 மி.மீ
அடார் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) -  1 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_weatherman
#tamilnaduweather.com

மேலும் பல வானிலை தொடர்பான தகவல்களுடன் உங்களை பிற்பகல் நேர குரல் பதிவில் சந்திக்கிறேன்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக