11.12.2020 நேரம் பிற்பகல் 2:00 மணி நேற்றைய பதிவில் நான் உங்களிடம் குறிப்பிட்டு இருந்ததை போலவே #தர்மபுரி நகரில் அதிகாலை நேரத்தில் குறைந்தபட்சமாக 18°C வெப்பநிலை பதிவாகியுள்ளது அதே போல சமவெளி பகுதிகளில் #ஓசூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 15°C க்கும் குறைவான அளவு வெப்பநிலை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பதிவாகியுள்ளது #நீலகிரி , #கொடைக்கானல் , #ஏற்காடு உட்பட மலைப்பிரதேசங்களில் இந்த காலகட்டத்தில் பணிப்பொழிவு அதிகரிப்பது என்பது இயல்பு தான் ஆனபோதும் நாளை மறுநாள் அதிகாலை நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே #நில_உறைப்பணி ( #Ground_frost) ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் உள்ளது இன்று அதிகாலை நேரத்தில் #கொடைக்கானல் மற்றும் #உதகமண்டலத்தில் குறைந்தபட்சமாக 10°C மற்றும் அதற்கும் குறைவான அளவு வெப்பநிலையே பதிவாகியிருக்கிறது.அடுத்த 2 நாட்களில் பணிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.தமிழகம் மற்றும் #புதுச்சேரி யின் அநேக இடங்களிலும் இன்றுடன் ஒப்பிடுகையில் நாளை அதிகாலை நேரத்திலும் நாளையுடன் ஒப்பிடுகையில் நாளை மறுநாள் அதிகாலை நேரத்திலும் வெப்பநிலை குறைபாடு நிச்சயமாக இருக்கும்.
தென்கடலோர பகுதிகளில் 18.12.2020 அல்லது 19.12.2020 ஆம் தேதி வாக்கில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.20.12.2020 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வடகடலோர மாவட்டங்களிலும் மழை வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
====================
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 8 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 4 மி.மீ
பிளவாக்கல் அணை (விருதுநகர் மாவட்டம்) - 4 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 1 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com