இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 டிசம்பர், 2020

14.12.2020 Today's weather report | Last 24 hours complete rainfall data | இன்றைய வானிலை

0
14.12.2020 நேரம் பிற்பகல் 2:20 மணி நாம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்பார்த்து இருந்தது போல இன்று அதிகாலை நேரத்தில் #நீலகிரி மாவட்டம் #உதகமண்டலம் பகுதியில் குறைந்தபட்சமாக 5°C வெப்பநிலை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது இவைத்தவிர்த்து #கொடைக்கானல் சுற்றுவட்டப் பகுதிகளில் குறைந்தபட்சமாக அதிகாலை நேரத்தில் 7.9°C அளவு வெப்பநிலையும் பதிவாகி இருக்கிறது.இவை மட்டும் அல்லாது தமிழகம் மற்றும் புதுச்சேரி யின் அநேக இடங்களிலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது சமவெளி பகுதிகளில் இருக்கும் முக்கியமான நகரத்தை பொறித்தவரையில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல #தர்மபுரி நகர பகுதியில் குறைந்தபட்சமாக 16.5°C வெப்பநிலை இன்றைய அதிகாலை நேரத்தில் பதிவாகி இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி  மாவட்டம் #பேச்சிப்பாரை அணை பகுதிகளில் கிட்டத்தட்ட 9 மி.மீ அளவு மழை பதிவாகியிருக்கிறது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேர சூழல்களே தொடரும்.

14.12.2020 ஆகிய இதுவரையில் #வடகிழக்கு_பருவமழை காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 434 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது 01.10.2020 முதல் 14.12.2020 வரையிலான இந்த காலகட்டத்தின் இயல்பான அளவான 412 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 5% அதிகம்.இந்நிலையில் நாம் முன்னதாக எதிர்பார்த்து இருந்ததை விட ஒரு நாள் முன்பாக 16.12.2020 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பதிவாக உள்ளது அதற்கு அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 19.12.2020 தேதி வரையில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #புதுச்சேரி , #கடலூர் மாவட்டங்கள் உட்பட வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் சில இடங்களில் மழை பதிவாகும்.டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழை அவ்வப்பொழுது பதிவாகும்.17.12.2020 , 18.12.2020 ஆம் தேதிகளின் வாக்கில் தென் உள் ,மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.

இது வலுக்குறைந்த சுழற்சி தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தெற்கே நகர்ந்து அதன் பின்னர் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படுவதால் தற்காலிகமாக ஏற்பட்டு இருக்கும் மழை வாய்ப்புகள்.ஆகையால் அதிக எதிர்பார்ப்புகளை குறைந்துக் கொண்டு உங்களது பகுதியில் பதிவாகும் மழையை அனுபவியுங்கள்.

அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான தகவல்களை ஒவ்வொரு நாளும் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்பொழுது மழை பதிவாகும் 2021 ஜனவரி மாதத்திலும் அவ்வப்பொழுது மழை வாய்ப்புகள் உண்டு.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் வெப்பசலன மழை மேற்கு உள் மாவட்டங்களுக்கு சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.

இதுவரையில் #புதுச்சேரி மாவட்டத்தில் 990 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது 01.10.2020 முதல் 14.12.2020 வரையிலான இந்த காலகட்டத்தின் இயல்பான அளவான 806 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 23% அதிகம் அதே போல #காரைக்கால் மாவட்டத்தில் 967 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தின் அதன் இயல்பான அளவான 900 மி.மீ உடன் ஒப்பிடுகையில் 7% அதிகம்.
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக