இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

20.12.2020 Typhoon kronvanh likely to form in south china sea today | today's weather report | இன்றைய வானிலை | தென் சீன கடல் பகுதிகளில் உருவாக இருக்கும் புயல்

0
20.12.2020 நேரம் பிற்பகல் 2:00 மணி பிலிப்பைன்ஸ் (#Phillipines) நாட்டினை ஒட்டி #puerto_princesa தீவுகள் அருகே நிலைக்கொண்டு இருக்கும் " #Vicky " (#விக்கி) காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாம் எதிர்பார்த்து இருந்தது போல தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது தற்சமயம் அதனை ஒட்டிய தென் சீன  கடல் பகுதிகளின் வெப்பநிலை 29°C முதல் 30°C அளவில் இருப்பதால் அது புயலாக உருவெடுப்பது உறுதி எனவே கூறலாம்.அது ஒரு புயலாக உருவெடுத்து விட்டதாக அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியான பிறகு அதற்கு உலக வானிலை அமைப்பின் அறிவுறத்தலின் பெயரில் #Kronvanh என்கிற பெயர் சூட்டப்படும் அதனுடைய நகர்வுகள் தொடர்பாக காலையில் ஒரு குரல் பதிவை நமது Youtube பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறேன் - https://youtu.be/7r4fSelwwz8 அதில் விரிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.இந்த மாத இறுதியில் இருக்கும் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் தொடர்பாகவும் அந்த குரல் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

மாலத்தீவுகள் பகுதிக்கு தெற்கே இருக்கும் சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் காற்றின் வேகம் பல்வேறு இடங்களிலும் இயல்பை விட அதிகமாகவே இருக்கும் #ராமேஸ்வரம் , #மண்டபம்  பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ முதல் 60 கி.மீ கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் 
 
அதேபோல #காரைக்கால் , #நாகப்பட்டினம்  , #புதுச்சேரி , #கடலூர் , #மயிலாடுதுறை  , #திருவாரூர் உட்பட வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மரங்கள் அதிகமாக இருக்கும் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் காற்றின் வேக தாக்கத்தை எளிதாக உணர முடியும்.

#திருச்சி , #தஞ்சை , #கும்பகோணம் , #புதுக்கோட்டை , #மதுரை ,#ராமநாதபுரம் , #தூத்துக்குடி ,#காரைக்குடி , #தேவகோட்டை  , #சிவகங்கை என தென் உள் , உள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலும் மணிக்கு அடதிகபட்சமாக 45 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.

அடுத்து வரக்கூடிய நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் 22.12.2020 ஆம் தேதி அன்று பனிப்பொழிவின் தாக்கம் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உணரப்படும்.இது தொடர்பான விரிவான தகவல்களை அடுத்த சில மணி நேரங்களில் குரல் பதிவு செய்கிறேன்.

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக